- எம்.எல்.பிரபா
கோயம்பேட்டில் 'ஶ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்' அமைந்துள்ளது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த கோயில் உள்ளது. இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கோவிலுக்கு எதிரே குறுங்காலீஸ்வரர் கோயில் என்னும் பேர் கொண்ட சிவன் கோயில் ஒன்று உள்ளது. இரண்டும் ராமாயண காலத்தோடு சம்பந்தப்பட்டதாக கருதப்படுகிறது.
வைகுண்ட வாசல் பெருமாள் கோயில் நுழைவு கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் கொடிமரம் உள்ளது. சிறிய கருடன் சன்னதியும் உள்ளது .மூலவர் ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் என்றும், உற்சவமூர்த்திக்கு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் என்றும், பெயர் .தாயாருக்கு 'கனகவல்லி தாயார்' என்று பெயர்.
ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கே வாழ்ந்ததாக கூறப்படுகிறது. சீதா தேவியை ராமர் காட்டிற்கு அனுப்பிய போது இங்கே வந்து வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் பாதுகாப்பாக தங்கி தாக கூறப்படுகிறது. அப்போது சீதாதேவி கர்ப்பிணியாக இருந்ததாகவும், பிறகு லவன்,குசன் பிறந்ததாகாவும் கருதப்படுகிறது.

கோவிலின் மூலஸ்தானத்திற்கு வெளியே வால்மீகி முனிவரின் சிலை உள்ளது. லவன், குசன் இரண்டு குழந்தைகளின் சிலையும் இரண்டு புறமும் உள்ளது. இதனால் வால்மீகி முனிவர் இந்த இரண்டு குழந்தைகளையும் வளர்த்த ராக நம்பப்படுகிறது. பக்கத்தில் கர்ப்பிணியாக சீதா தேவியின் சிலையும் உள்ளது .அங்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் சீதாதேவிக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. மற்றும் குழந்தை இல்லாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு இங்குள்ள சீதாதேவிக்கு வளைகாப்பு நடத்தி குங்குமம், மஞ்சள், தாம்பூலம்,வளையல் மற்றும் வஸ்திரம் சாத்தி பக்தர்கள் எல்லோருக்கும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். உடனே அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோயில் நித்திய சொர்க்கவாசல் கோயில் ஆகும். பொதுவாக வைகுந்த பெருமாள் அமர்ந்த நிலையில் காட்சி தருவார் .ஆனால் இந்த கோவிலில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் .இது மிகவும் விசேஷமானதாகும்.
ஸ்ரீராமர் அஸ்வமேத யாகம் நடத்திய போது அந்த குதிரை ஊர் ஊராக சுற்றி வந்தது. அந்த குதிரையை லவனும், குசனும் பிடித்துக் கட்டிய இடம் இது என்று கூறப்படுகிறது. ராமர் சாதாரணமாக உடையில் மரஉரி தரித்தவராகவும், சீதாதேவி கோடாலி கொண்டையோடும் இருவரும் தனியாக அருள் பாலிக்கின்றனர். இருவருக்கும் தலையில் கிரீடம் இல்லை.
கோயிலுக்கு எதிரே அனுமார் சன்னதி தனியாக உள்ளது. அங்கேயும் அனுமாருக்கு தலையில் கிரீடம் இல்லை .இந்த அனுமார் கோயிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பக்தர்கள் தங்களுடைய குறைகளை வேண்டுதலாக்கி மஞ்சள் துணியில் தேங்காயை வைத்து கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். "ராம பக்த ஆஞ்சநேயர்" என்று இந்த ஆஞ்சநேயரை அழைக்கிறார்கள். இந்த ஆஞ்சநேயரை வேண்டிக் கொண்டாள், நினை த்தது கட்டாயம் நிறைவேறும் என்று பக்தர்களின் நம்பிக்கை.
இங்கே ஆண்டாளுக்கும் தனி சன்னதி உள்ளது. ஆண்டாள் சன்னதியை சுற்றி பிரதட்சணமாக வரும்போது சுவரில் திருப்பாவை 30 பாசுர ங்களும் எழுதி அதற்கு உரிய படங்களும் அழகாக வரையப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு கண்களுக்கு விருந்தாக உள்ளது. இது ஒரு பிரார்த்தனை ஸ்தலமாகவும் உள்ளது. கோயிலுக்கு சென்று வெளியில் வந்த பிறகு மனதிற்கு மிகவும் நிம்மதியும், அமைதியும் தருகிறது. கட்டாயம் நீங்களும் ஒருமுறை அந்த கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து விட்டு வாருங்கள்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
{{comments.comment}}