- ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன்
நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்தது.
முனுசாமி என்னும் ஏழையின் மகள் ஒரு உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவனை காதலிக்கிறாள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக இருக்கிறாள். முனுசாமி மறுக்கிறான்.
மகள் நீதிமன்றத்தில் முறையிடுகிறாள். முனுசாமி நீதிபதியிடம் ஐயா, நான் மிகவும் ஏழை. ஆனால் என் மகளோ உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை காதலிக்கிறாள். அவனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள். இது எப்படி ஐயா சாத்தியமாகும்? நீங்களே அவளுக்கு புத்திமதி சொல்லுங்கள் என்றான்.
வழக்கை ஆராய்ந்த நீதிபதி முனுசாமியிடம் உன் மகளின் வயது 23 அவள் மேஜராகிவிட்டாள். சட்டப்படி அவள் விருப்பம்போல் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். நீ அதை தடுக்கக் கூடாது. இதுதான் என் தீர்ப்பு. சரியா? என்றார்.

முனுசாமி அதைக்கேட்டு சிரித்தவாறு சரிங்க சம்பந்தி என்றான். நீதிபதி திடுக்கிட்டு சம்பந்தியா, என்ன உளறுகிறாய்? என்று கேட்க முனுசாமி என் மகள் காதலிப்பது உங்கள் மகனைத்தான் என்றான்.
அவ்வளவுதான். மயக்கம் போட்டு விழுந்த நீதிபதி இந்த கதை வெளி வரும் வரை எழுந்திருக்கவேயில்லை.
(ராஜஸ்ரீ என்கிற வி.பி.ஸ்ரீநிவாசன், அம்பத்தூர், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!
தேனினும் இனிய.. பேரருள் நிறைந்த திருவாசகம்!
Happiness is not a destination; it is how we choose to live each day!
ராவணனின் ராமநாமம்
{{comments.comment}}