- ராஜஸ்ரீ
ஒரு தெரு. அதில் ராமசாமி ஒரு அடுக்ககத்தில் மூன்றாவது மாடியில் வசிக்கிறார்.
தெருவில் சில சிறுவர்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் பந்தை ஓங்கி உயர அடித்தான். அது ராமசாமி வீட்டு ஜன்னலின் கண்ணாடி கதவை பதம் பார்த்தது.
கோபத்துடன் வெளியே வந்து எட்டிப் பார்த்து யாருடா, பந்தை அடித்தது? என்று கேட்க சிறுவர்கள் பயந்து போய் அடித்தவனைக் காட்டினர்.
ராமசாமிக்கு அந்த பையனையும் அவன் வீடும் தெரியும். உடனே அவர் கீழே இறங்கி வர ஆரம்பித்தார். அவர் வருகிறார் என அறிந்து அவன் பயந்து போய் தன் வீட்டுக்கு ஓடி விட்டான். வீட்டிற்குச் சென்ற அவன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் அமைதியாக பயந்தவாறு உட்கார்ந்து விட்டான்.

ராமசாமி அவன் வீட்டிற்கு வந்து அவன் அப்பாவை அழைத்து உங்கள் மகன் என்ன செய்தான் தெரியுமா? என்று கேட்டார்.
அவன் அப்பா தெரியாதே. தெருவில் கிரிக்கெட் ஆடப்போகிறேன் என்று சொல்லி விட்டுப் போனான். ஆட்டம் முடிந்து விட்டது போலிருக்கிறது. வந்து விட்டான் என்றார்.
ராமசாமி அவன் என்ன செய்தான்? என்று கேளுங்கள் என்றார். என்னடா செய்தாய்? என்று அவனை மிரட்டியவாறு கேட்டார். ராமசாமி அவன் சொல்ல மாட்டான். நான் சொல்கிறேன். அவன் பந்தை ஓங்கி அடித்ததில் என் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து விட்டது என்றார்.
அதைக்கேட்ட சிறுவனின் தந்தை அடடா, சாரி சார். கண்ணாடி மாத்த எவ்வளவு ஆகுமோ அவ்வளவு நான் கொடுத்து விடுகிறேன். என்றார். அதற்கு ராமசாமி கண்ணாடியை விடுங்க சார். நானே புதுசு போட்டு விடுகிறேன் என்றார்.
சிறுவனின் அப்பா வேறு என்ன எதிர்ப்பார்க்கிறார்? என்று குழம்பினார்.
அப்போது, ராமசாமி, சார், இவன் அடித்த பந்து மூன்றாவது மாடி வரை வந்திருக்கிறது என்றால் இவன் எவ்வளவு திறமை மிக்கவன். இவன் திறமை வீனாகலாமா? அதனால் இவனை நாளையே கிரிக்கட் கோச்சிங் வகுப்பில் சேர்த்து விடுங்கள். நானும் உதவி செய்கிறேன். வருங்காலத்தில் பெரிய கிரிக்கெட் வீரனாக வரட்டும். அப்படி வந்தால் நமக்குத்தானே பெருமை என்றார்.
அதைக்கேட்ட சிறுவனும் அவன் அப்பாவும் ராமசாமியை நன்றியுடன் பார்த்தனர்.
(ராஜஸ்ரீ என்ற வி.பி.ஸ்ரீநிவாசன் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர்)
பெண்.. தலை நிமிர்ந்து நிற்கும் மிகப் பெரும் ஜோதி!
D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!
Short Story: திறமையை ஊக்குவிப்போம்!
எங்கே என் வண்டி சாவி?
நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!
Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை
நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?
பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!
Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?
{{comments.comment}}