திருந்திய குரங்கு

Oct 13, 2026,12:35 PM IST

- சு. மலர்விழி


ஒரு பெரிய காட்டில் குரங்கு ஒன்று வாழ்ந்து வந்தது. அது மரத்துக்கு மரம் தாவி, பழங்களைப் பறித்து உண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. ஆனால், மற்ற விலங்குகளைக் கேலி செய்வதும், மரக்கிளைகளை ஒடித்து அவற்றின் மீது வீசுவதும் அதன் வழக்கமாக இருந்தன.அவை தன்னைத் துன்புறுத்திவிடுமோ என்று விலங்குகள் பயந்து ஓடுவதைக் கண்டு அது சிரித்து மகிழும். இதனால், மற்ற விலங்குகள் அனைத்தும் அதைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கின.


ஒரு நாள் காட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. காற்றின் வேகத்தால் மரக்கிளைகள் ஆடின.  மரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியாத குரங்கு, மழையிலிருந்து தப்பிக்க ஓர் பாதுகாப்பான இடத்தைத் தேடி அலைந்தது.


அப்போது, மரத்தில் இருந்த பறவைகள், “குரங்கே! எங்கள் கூட்டின் அருகில் உள்ள கிளையில் வந்து தங்கிக்கொள். மழை நிற்கும் வரை இங்கே பாதுகாப்பாக இருக்கலாம்” என்று அன்புடன் அழைத்தன.




அதற்குக் குரங்கு, “இல்லை... இல்லை... அந்த சிறிய கிளையில் என்னால் தங்க முடியாது. வேறு இடம் தேடிக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றது.


பிறகு, ஒரு குகையின் அருகே சென்ற குரங்கைச் சிங்கமும் புலியும் கண்டன. அவை, “குரங்கே! மழை நிற்கும் வரை எங்கள் குகையில் தங்கிக்கொள்” என்று அழைத்தன. ஆனால், அவைகள் தன்னை கொன்றுவிடுமோ என்று அவற்றைப் பற்றித் தவறாக எண்ணிய குரங்கு,  அஞ்சி, அங்கிருந்து சென்றுவிட்டது.


நீண்ட நேரம் அலைந்தும் பாதுகாப்பான இடம் கிடைக்காததால் குரங்கு மிகவும் வருந்தியது. அப்போது, தான் முன்பு செய்த செயல்களை நினைத்துப் பார்த்தது. மற்ற விலங்குகளைக் கேலி செய்ததையும், அவற்றுக்குத் தொல்லை கொடுத்ததையும் எண்ணி வெட்கமடைந்தது.


“நான் எவ்வளவு கொடுமையாக நடந்துகொண்டேன்! ஆனால், அந்த விலங்குகள் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், இந்த இக்கட்டான நேரத்திலும் எனக்கு உதவ முன்வந்தன. அவற்றின் அன்பையும் நல்ல மனதையும் நான் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்” என்று வருந்தியது.


மழை நின்றதும், குரங்கு தங்குவதற்குப் பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்து, மரக்கிளைகளைப் பயன்படுத்தி ஒரு சிறிய இருப்பிடத்தை அமைத்துக்கொண்டது. அதன்பிறகு, மற்ற விலங்குகளைக் கேலி செய்வதையும் அவற்றுக்குத் தொல்லை கொடுப்பதையும் முற்றிலும் கைவிட்டது. எல்லா விலங்குகளிடமும் அன்பாகவும் நட்பாகவும் பழகத் தொடங்கியது.


குரங்கின் இந்த மாற்றத்தைக் கண்ட விலங்குகள் மகிழ்ச்சியடைந்தன. நாளடைவில், குரங்கும் மற்ற விலங்குகளுடன் அன்பாகப் பழகி, மகிழ்ச்சியாக வாழத் தொடங்கியது.


(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

புதிய ஆளுநர்கள் நியமனம்: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநரானார் ராஜேந்திர அர்லேகர்

news

திருந்திய குரங்கு

news

புதிய பாதை.. ஒரு நிமிடக் கதை (34)

news

அறுபடை வீடுகளுக்கு நிகரான.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

news

பொய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்