குட்டிக்கதை.. அழகான பேபி!

Oct 02, 2026,02:54 PM IST

- சுதா திருநாராயணன்


சஞ்சனாவின் ஆர்வமும் மகிழ்ச்சியும் ஓடையில் மீன்கள் துள்ளுவது போல் துள்ளிக் கொண்டிருந்தன. முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அவள் வயிற்றையே பார்த்து பார்த்து போர் அடித்தது.


படுத்துக்கொண்டும் நின்று கொண்டும் பலவித போஸ்களில் தன் வயிற்றை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா. நாளை ஸ்கேன் ரிப்போர்ட்க்காக டாக்டரை பார்க்க வேண்டும். சஞ்சய் கடிந்தான் தன் மனைவியை. 


"சீக்கிரம் தூங்கு, சஞ்சனா. நாளை காலைல 8 மணிக்கு எல்லாம் ஹாஸ்பிடலுக்கு கிளம்பணும்."


டாக்டர் மாலினி இருவரையும் பார்த்து புன்னகைத்தாள். ஸ்கேன் ரிப்போர்ட்டை சஞ்சனாவின் கையில் கொடுத்துவிட்டு விளக்க ஆரம்பித்தாள். "பேபி சரியான பொஸிஷன்ல இருக்கு. வளர்ச்சி சரியா இருக்கு. இருதய துடிப்பு சரியா இருக்கு. சஞ்சனா நீ நல்லா சத்தான ஆரோக்கியமான உணவு சாப்பிடறியா? "


  "ஆமா டாக்டர். பேபி நல்லா அழகா இருக்கா டாக்டர்? பெண் குழந்தைன்னா ஸ்ரீதேவி மாதிரி ஹேமமாலினி மாதிரி இருக்கணும். ஆண் குழந்தை என்றால் அரவிந்த்சாமி மாதிரி இருக்கணும்."




டாக்டர் மாலினி சிரித்துக்கொண்டே கூறினாள். "குழந்தை உங்கள மாதிரி இருக்கும். ஆரோக்கியமா இருக்கும். எவ்வளவு அழகா இருக்கும் என்பது பிறந்தப்புறம் தான் தெரியும்."


"ஆமா டாக்டர் குழந்தை அழகா இருக்கணும்னு தான் வயிற்றில் தினம் பவுடர் கிரீம் எல்லாம் தடவரேன்." என்ற சஞ்சனாவை பார்த்து மனதுக்குள் புன்னகைத்தாள் டாக்டர்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்