சூப்பர் ப்ளூ மூன் 2023... இன்று இரவு வானவேடிக்கை.. மிஸ் பண்ணிடாதீங்க!

Aug 30, 2023,04:44 PM IST
டெல்லி : இன்று இரவு வானில் அரிய நிகழ்வாக சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு நிகழ உள்ளது. சூப்பர்மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகிய இரண்டு ஒரே நேரத்தில் நிகழ உள்ளதால் இந்த அரிய நிகழ்வினை காண உலகமே ஆவலாக உள்ளது.

சூப்பர் மூன் என்பது வழக்கத்தை விட நிலா, பூமிக்கு மிக அருகில் வருவதால், நிலா பெரிதாக காட்சி தரும் நிகழ்வாகும். இதோடு ப்ளூ மூன் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வரக் கூடிய இரண்டாவது பெளர்ணமி இன்று நிகழ உள்ளது. இந்த அரிய நிகழ்வு இரவு 08.37 மணியளவில் நடைபெற உள்ளது. இதை நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு முதல் ப்ளூ மூன் இன்று நிகழ உள்ளது.  ஒரு மாதத்தில் இரண்டாவது பெளர்ணமி வரும் போது அது ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி ஒரு ப்ளூ மூன் தோன்றிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இன்றும் நிகழ உள்ளது. பூமியில் நீள்வட்ட பாதைக்கு அருகில் நிலா உள்ளதால் வழக்கத்தை விட பெரிதாகவும், அதிக வெளிச்சத்துடனும் காணப்படும். 

பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு பெளர்ணமி தான் வரும். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பெளர்ணமி வந்த நிலையில், இன்று இரண்டாவது பெளர்ணமி ஏற்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 4 முழு நிலவுகள் வரும் போது 3வது முழு நிலவை ப்ளூ மூன் ஆக கருதிகிறோம். சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் இணைந்து வரும் இந்த அரிய நிகழ்வு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஏற்படாது என சொல்லப்படுகிறது. 

இன்று இரவு தோன்றும் இந்த சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு சர்வதேச நேரப்படி இரவு 08.37 மணிக்கு தோன்ற உள்ளது. இந்தியாவில் சூப்பர் ப்ளூ மூனை ஆகஸ்ட் 31 ம் தேதி காலை 05.57 மணிக்கு தான் காண முடியும். அந்த சமயத்தில் அதிக பிரகாசமாக தோன்றும். அதே சமயம் ஐரோப்பா, லண்டன் போன்ற நாடுகமளில் இன்று இரவு 08.08 மணிக்கே தோன்ற உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு

news

கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

news

விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

news

தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!

news

வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே

news

Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!

news

கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!

news

என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!

news

உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்