- ஸ்வர்ணலட்சுமி
பராபவ வருடம் 20 26 ஆனி மாதம் 17ஆம் நாள் புதன்கிழமை ஜூலை மாதம் தொடங்கி இருப்பது மிகவும் விசேஷமானது. ஆனி மாதம் 17ஆம் தேதி முதல் ஆடி மாதம் 15 ஆம் தேதி வரை உள்ள 31 நாட்கள் கொண்ட ஜூலை மாதத்தில் பலவித விசேஷங்களும்,ஆன்மீக சிறப்புகளும் நிறைந்துள்ளது.
அம்மனின் அருளை பெறும் ஆடி மாதம் ஜூலையில் தான் பிறக்கிறது. ஜூலை மாதம் சிவன் மற்றும் அம்பிகைக்கு உரிய விரதங்களை கொண்ட மாதம் என்பதால் இது வழிபாட்டிற்குரிய மாதமாகவும், வேண்டிய வரங்களை இறைவனிடம் வேண்டி அருள் பல பெறும் அற்புதமான மாதமாகவும் அமைந்துள்ளது.
பெயர் காரணம்:
இம்மாதத்திற்கு பண்டைய பெயர் 'குயின்டிலிஸ்' (Quintilis) என்பதாகும். ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர் பிறந்த மாதமாக இருப்பதால் அவரது நினைவாக "ஜூலை" என்று பெயரிடப்பட்டது.
தட்சிணாயணம் :

ஆன்மீக ரீதியாக சூரியனின் தெற்கு நோக்கிய பயணமாக தட்சிணாயன புண்ணிய காலம் ஜூலை மாதத்தில் தொடங்குகிறது.
வெயிலின் தாக்கம் குறைந்து பருவமழை துவங்கும் மாதமான ஜூலை மாதத்தை "ஸ்ரவண மாதம் "என்று அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் தேவர்கள் உறக்கத்தில் இருப்பார்கள் எனவே, இந்த மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. அதேசமயம் வழிபாடுகள் செய்து வாழ்வில் நலன்கள் பலவற்றை பெறுவதற்கு ஏற்ற மாதம் ஜூலை மாதம் ஆகும்.
ஜூலை மாதம் வரும் விசேஷ நாட்கள் மற்றும் விரத நாட்கள் பின்வருமாறு..
ஜூலை 1 முதல் 7 வரை வன மகோத்சவம் - மரக்கன்று நடும் விழா.
ஜூலை 3 - வெள்ளி சங்கடஹர சதுர்த்தி.
ஜூலை 5 - ஞாயிறு சுப முகூர்த்தம்.
ஜூலை 6 -திங்கள் சஷ்டி விரதம்.
ஜூலை 7 -செவ்வாய் அஷ்டமி.
ஜூலை 8 -புதன் நவமி.
ஜூலை 9 -வியாழன் தசமி.
ஜூலை 10 -வெள்ளி ஏகாதசி, கிருத்திகை விரதம்.
ஜூலை 12 -ஞாயிறு பிரதோஷம் சுப முகூர்த்தம்.
ஜூலை 13 -திங்கள் அமாவாசை .
ஜூலை 17- வெள்ளிக்கிழமை ஆடி 1.
ஜூலை 19 -ஞாயிறு சஷ்டி விரதம்.
ஜூலை 21 செவ்வாய் வளர்பிறை அஷ்டமி.
ஜூலை 22 புதன் வளர்பிறை நவமி.
ஜூலை 23 வியாழன் தசமி.
ஜூலை 25 சனி ஏகாதசி விரதம்.
ஜூலை 29 புதன் பௌர்ணமி.
ஜூலை 30 வியாழன் திருவோணம்.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}