நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!

Sep 29, 2026,10:58 AM IST

- டி. கலைமணி


யார் பாராட்டினாலும் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால் அறிவுரை என்று கூறினால் பலருக்கும் கசக்கிறது.


தோல்வி வந்தால் பலரும் சொல்வது, நான் முன்பே சொன்னேன் என்ற பதில் தான். அதுவே வெற்றி கிடைத்தால், பலரும் சொல்வது அவர் மிகக் கெட்டிக்காரர் என்பது


கவலைப்படுதல் காலத்தை விரயமாக்கும். அது எதையும் மாற்றாது. அது மனதை குழப்பி உங்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் திருடி விடும்.


கடினமாய் உழைத்தவர்களை விட, கவனமாய் உழைத்தவர்களே முன்ணேறி உள்ளார்கள்


வழிபாடு செய்யுங்கள். கடவுளுக்கு அருசில் நீங்கள் செல்லலாம். சேவை செய்யுங்கள்.. கடவுள் உங்கள் அருகில் வருவார். 




நிறைய முடிச்சுக்களோடு கிடைத்தக் கயிற்றில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்துக் கொண்டே வரும் போது.. 

கடைசி முடிச்சை சரி செய்த பின் ஒரு பெருமூச்சும் ஓர் அழகான, அமைதியான புன்னகை யோடு ஓர் ஆத்மத் திருப்தியும் கிடைக்கும் பாருங்க ... அதைத்தான் இங்க நம்ம எல்லோரும் வாழ்க்கை என்று கத்துக்கிட்டு இருக்கோம்.


வாழ்க்கை எனும் பந்தயத்தில் கீழே விழும் போது எழுந்து ஓடுவதற்கான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கா விட்டால், வலிகள் உங்களைத் தேர்ந்தெடுக்கும் படைத்தவனுக்குத் தெரியும் நம்மை வழிபடுத்த நமக்கு வழிகாட்ட தேவையானதை தர எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகு வர்த்தி போல தான்  தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும், அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்.


நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை விட என்ன இல்லை என்று ஆராய்ந்து கேலி பேசுவதில் தான் இந்த உலகம் அதிக அக்கறை கொள்கிறது!


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்