சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,760க்கும் ஒரு சவரன் ரூ.54,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று சவரனுக்கு ரூ.65 உயர்ந்து இருந்தது தங்கம் விலை. இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் தங்கத்தின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் தங்கம் விலை கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் தங்கத்தின் பயன்பாடும் அதிகரித்து வருவதால், நாட்டில் பொருளாதார நிலை சீராகும் வரை தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து தான் காணப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...

இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,760 ரூபாயாக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி அதே விலையிலேயே இருந்து வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,080 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,375 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,000 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,600 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,76,000க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,750 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,37,500க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
இன்றைய வெள்ளியின் விலை சற்று அதிகரித்து உள்ளது.கடந்த 26ம் தேதி முதல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்று வரை அதே விலையிலேயே இருந்து வந்தது. நேற்று உயர்ந்த வெள்ளியின் விலை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 0.20 காசுகள் அதிகரித்து ரூ.97.70க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 781.60 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.977 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,770 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.97,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}