செங்கோட்டையனின் வருகை தவெகவிற்கு பலம் சேர்க்கும்: தமிழிசை சவுந்தரராஜன்

Nov 29, 2025,05:27 PM IST

சென்னை: செங்கோட்டையன் அனுபவமான அரசியல்வாதி. அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது பலம் சேர்க்கும். சொங்கோட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை  சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், முன்னாள் அமைச்சர் செங்கேட்டையன், விஜய்யின் தவெக கட்சியில் இணைந்திருப்பதை நான் அரசியல் நகர்வாகத்தான் பார்க்கிறேன். அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்ட பிறகு அவருக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். செங்கோட்டையன் அனுபவமான அரசியல்வாதி. அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது பலம் சேர்க்கும். சொங்கோட்டையன் அவராகவே ஒரு முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவுக்கு பாஜக தான் காரணம் என்று சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். 




அதிமுக - பாஜக கூட்டணி பலம் பொருந்தியதாகத்தான் இருக்கிறது. நாங்கள் வரும் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெருவோம். அதில் எந்த,மாற்றுக்கருத்தும் இல்லை. பாஜகவை பார்த்து திமுகவும், இந்தியா கூட்டணியும் மிரண்டு போய் உள்ளனர். அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். இன்னும் பலர் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சில சலசலப்புகளினால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது. குறையவும் குறையாது. எல்லோருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அந்த கடமை திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி திமுகவை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.


தமிழகத்தில் திமுக ஆட்சி மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம் - ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. உதயநிதி பிறந்த நாளில் சொலுத்துகின்ற கவனம் மற்ற குழந்தைகளை பாதுகாப்பதில் இல்லை. இந்த வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் அப்பாவு கவர்னரை பற்றி பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் திமுக நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்