சென்னை: தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களிலும், நாளை 8 மாவட்டங்களிலும் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
01-08-2025 இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02-08-2025 நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

03-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
04-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
05-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயமுத்தூர் மாவட்டத்தில் மழை பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மழை பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (01-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரிவ் ஒருசில பகுதிகளில் இடி, மிவ்வலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37°-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (02-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான அறிவிப்பு
இன்று முதல் வரும் 5ம் தேதி வரை மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுமையை சோதிக்கும் கூட்டணிக் கட்சிகள்.. அமைதியாக இருக்கும் திமுக.. என்ன நடக்கும்?
தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய பட்ஜெட்:பிப்ரவரி 12ல் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ
தமிழகத்தில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது: ஜி.கே.வாசன் பேட்டி
ராமதாஸ் பாமக வந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்...திருமாவளவன் உறுதி
கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?
ஒரு வாரத்துக்கு நகைக் கடை பக்கமே போகாமல் இருந்தால் தங்கம் விலை குறையுமா!?
பிப்ரவரி 17-ல் தமிழக இடைக்கால பட்ஜெட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்திய சீனியர் அணிக்கு வைபவ் வர முடியாது.. குறுக்கே நிற்கும் கெளஷிக் (ஐசிசி விதி)!
முகம்து சிராஜுக்கு அடித்த லக்கி பிரைஸ்.. ராணா வெளியேறினார்.. சிராஜுக்கு வாய்ப்பு!
{{comments.comment}}