ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

Jun 06, 2026,03:48 PM IST

மும்பை: ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த வலுவான இந்திய அணிக்கு நட்சத்திர பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி இளம் வீரர் திலக் வர்மா துணைக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இன்னொரு முக்கிய அம்சமாக, 15 வயதேயான வைபவ் சூர்யவன்ஷிக்கும் அணியில் இடம் தரப்பட்டுள்ளது. 


இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இரு முன்னணி விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர்.


தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் தேர்வாகி பெருமை சேர்த்துள்ளனர்.




அனுபவ வீரர் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் வேகப்பந்து வீச்சு கூட்டணியை பலப்படுத்துகின்றனர்.


அணி விவரம்:


ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)

திலக் வர்மா (துணைக் கேப்டன்)

ரவி பிஷ்னோய்

அபிஷேக் சர்மா

நிதிஷ் குமார் ரெட்டி

ஜஸ்பிரித் பும்ரா

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

அக்சர் படேல்

ஹர்ஷித் ராணா

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்)

வாஷிங்டன் சுந்தர்

அர்ஷ்தீப் சிங்

சிவம் துபே

வருண் சக்கரவர்த்தி

வைபவ் சூர்யவன்ஷி


இங்கிலாந்து - அயர்லாந்து டூருக்கான அணிகளும் அறிவிப்பு


இதேபோல இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களுக்கான அணிகளையும் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


இரு நாட்டுத் தொடர்களுக்கும் ஷ்ரேயாஸ் ஐயரே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணி விவரம்:


ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ரவி பிஷ்னோய், அபிஷேக் சர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, முகம்மது சிராஜ், சஞ்சு சாம்சன், அக்சார் படேல், ஹர்ஷித் ராணா, இஷான் கிஷன், வாஷிங்டன் சுந்தர்,  அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, வருண் சக்கரவர்தத்தி, பிரின்ஸ் யாதவ், வைபவ் சூர்யவன்ஷி


இளம் திறமைகளும் அனுபவமும் கலந்த இந்த இந்திய அணி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்லும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்