தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே

Feb 21, 2026,03:28 PM IST

சென்னை : கமல்ஹாசலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தின் அப்டேட்டை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தலைவர் 174 படத்தின் டீசரை யாரும் கொஞ்சம் கூட கணிக்க முடியாத வகையில் இன்று வெளியிட்டுள்ளார்கள்.


ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தின் மூலம் ரஜினி-கமல் இருவரும் மீண்டும் ஒன்றிணைய உள்ளதாக தகவல் கிளம்பி பல வருடங்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வருகிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் டைரக்டர் செய்ய போவதாக சொன்னார்கள். காரணம், ரஜினி-கமல் இருவரையும் வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்க போவதாக சொல்லப்பட்டது. பிறகு டைரக்டர் ஷங்கர் பெயரும் அடிப்பட்டது. கடைசியாக டைக்டர் சுந்தர்.சி இந்த படத்தை டைரக்டர் செய்ய போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.




மாறிய டைரக்டர் : 


இதை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள், அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்தார். இப்படி டாப் டைரக்டர்கள் பலரிடம் இருந்து கை நழுவி போன தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு, கடைசியாக டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கப்படும். 2027ம் ஆண்டு பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என அறிவித்து விட்டார்கள். ஆனால் பிப்ரவரியே முடிய போகிறது, கிட்டதட்ட 47 வருடங்களுக்கு பிறகு ரஜினி-கமல் இணையும் போகும் படம் என்ற ஆர்வத்தை கிளப்பிய இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் காணவில்லையே என ரசிகர்கள் பலரும் தொடர்ந்து கேட்டு வந்தனர்.


தலைவர் 174 டீசர் :


இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக," தலைவர் 174 படத்தின் டீசர் நாளை (இன்று - பிப்ரவரி 21) பகல் 12.07 மணிக்கு வெளியாகும்" என இரவு 07.12 மணிக்கு, இருவர் நடந்து வருவது போன்ற நிழல் இருக்கும் வகையிலான அசத்தலான ஃபர்ஸ்ட்ருடன் அறிவிப்பு வெளியிட்டது ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம். இது ஏதோ சாதாரண பட அறிவிப்பு என்று தான் மேலோட்டமாக பார்த்தால் தெரியும். ஆனால் தலைவர் 174 படத்தின் போஸ்டர் துவங்கி, டீசர் இசை வரை மிக நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்துள்ளனர். அவற்றில் ரஜினி-கமல் மீண்டும் இணையும் படம் என்பதையும் மறைமுகமாக கூறி உள்ளனர்.


அட...இதுக்கு இது தான் அர்த்தமா?


ரெட் ஜெயின்ட் வெளியிட்ட இந்த அறிவிப்பில், டீசர் வெளியாகும் நேரம் 12.07, அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரம் 07.12. இதில் 07 என்பது கமல் பிறந்த தேதியை குறிப்பது. 12 என்பது ரஜினியின் பிறந்த தேதியை குறிப்பதாகும். இந்த படத்தை டைரக்டர் நெல்சன் இயக்க உள்ளார், அனிருத் இசையமைக்க உள்ளார். இதை  வழக்கமான தனது பாணியில் டீசராக வெளியிட்டுள்ளார் நெல்சன். டீசரின் ஆரம்பத்தில் நெல்சன் முதலில் செல்லும் அறையின் எண் 07 தான். அது கமலின் அறை.


அடுத்தடுத்து 2 படங்களில் ரஜினி-கமல் : 


தங்களுக்கே உரிய ஸ்டைலில் ரஜினி-கமல் இருவரும் தயாராவது போல் டீசர் துவங்குகிறது. இதை பார்த்ததும், இது தலைவர் 173 டீசரா, தலைவர் 174 டீசரா என்ற குழப்பம் பலருக்கும் வந்திருக்கும். தலைவர் 173ல் படத்தில் தான் கமல் தயாரிக்க ரஜினி நடிக்கிறார்கள் என்றார்கள். ஆனால் இதிலும் கமல் இருக்கிறாரே என தோன்றி இருக்கும். தலைவர் 173ல் திரை மறைவில் தான் கமல் இருக்க போகிறார். ஒருவேளை அந்த படத்தில் கெஸ்ட் ரோலில் கூட அவர் தோன்றவும் வாய்ப்புள்ளது. ஆனால் தலைவர் 174 படத்தில் ரஜினி-கமல் இருவருமே 40 வருடங்களுக்கு பிறகு சேர்ந்தே நடிக்க போகிறார்கள் என்பதை டீசரில் இடம்பெற்ற இசையிலேயே உடைத்து விட்டார் அனிருத்.


டீசர் இசையை கவனிச்சீங்களா?


இப்போதைய தலைமுறையினர் இந்த இசை, விஜய்யின் பீஸ்ட் படத்தில் இருந்து எடுக்கப்பட்டதோ என நினைத்திருக்கலாம். ஆனால் 1980 களின் சினிமா ரசிகர்கள் கண்டுபிடித்திருப்பார்கள், இது ரஜினியும் கமலும் கடைசியாக இணைந்து நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் பாடலின் இன்ட்ரோ இசை என்பதை.  அட ஆமாங்க. 1979ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான ஹிட் பாடலான "நினைத்தாலே இனிக்கும்" என்ற பாடலின் ஆரம்பத்தில் வரும் இசையை தான் ரீமேக் செய்து, இந்த டீசரில் அனிருத் பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகி விட்டது. அதோடு, kmxrk reunion, அதாவது km (கமல்ஹாசன்) rk (ரஜினிகாந்த்)என்று வேறு குறிப்பிட்டுள்ளார்கள். 


இவ்வளவு செய்திருக்கிறார்களா?


ஆனால் டீசரின் இறுதியில் கமல் கேட்பது போல், இந்த படத்தின் ஹீரோ ரஜினியா? கமலா? என்று தான் தெரியவில்லை. ஆனால் படத்திற்கு தலைவர் 174 என தற்காலிகமாக டைட்டில் வைத்திருப்பதால் நிச்சயம் இதில் ரஜினி தான் ஹீரோவாக நடிக்க போகிறார். அதுவும் கூட டீசரில் இருவரின் லுக்கை வைத்தே கண்டுபிடித்து விடலாம். ரஜினி கொஞ்சம் இளமையான லுக்கிலும், கமல் தற்போதுள்ள வயதான லுக்கிலும் தான் வருகிறார்கள். அது மட்டுமல்ல ரஜினி ஹீரோ என்பதால், காரின் சாவியை கமலிடம் தூக்கிப் போட்டு அவரை காரை ஓட்ட சொல்வது போல் தான் டீசரின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் கவனித்து பார்க்கையில், ஒரு டீசரை உருவாக்கவே இத்தனை விஷயங்களை நுணுக்கமாக பார்த்து பார்த்து செய்துள்ளார்களா? அப்படின்னா படத்தில் இன்னும் என்னெவல்லாம் வைத்திருப்பார்கள்? என ஆச்சரியப்பட வைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!

news

47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!

news

என்னுள் என்னைக் காண வைத்த தமிழே...!

news

சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

news

திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?

news

கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!

news

தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே

news

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே!

news

முத்தமிழ் அறிந்தால் முன்னேற்றம் காணலாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்