உண்மைச் சம்பவத்தின் பின்னணியில்.. ராபர்.. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் சிவகார்த்திகேயன்!

Apr 27, 2024,03:41 PM IST

சென்னை: சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ராபர். இப்பத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.


'மெட்ரோ' திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ள படம் தான் ராபர்ட். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


'மெட்ரோ' படத்தில் நடித்த  நாயகன் சத்யா இப்படத்திலும்  நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் என்பி, கலை பிபஎஸ் விஜய் சரவணன், நடனம் ஹரி கிருஷ்ணன். கோடை விருந்தாக இப்படம் மே மாதம் இறுதியில் வெளியாகும் வகையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


படத்தின் கதை




பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் சென்னைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன். ஒரு கிராமத்திலிருந்து சென்னையை நோக்கி வேலை தேடி வருகிறான் நாயகன். சென்னையின் பகட்டும் பளபளப்பும் அவனைக் கவர்கின்றன. மாநகர மக்களின் ஆடம்பர வாழ்க்கை மேல் அவனுக்குப் பிரமிப்பும் ஈர்ப்பும் வருகின்றன. நாயகனின்  ஆசை பேராசையாகி வெறியாக மாறுகிறது. அவனது குறுக்கு வழி திருட்டு வழியாக மாறுகிறது. ஆம், அவன் திருட்டுத் தொழிலில் இறங்குகிறான். நாயகன் தேர்ந்தெடுத்த பாதை அவன் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதே  'ராபர்'படத்தின் கதை.


தயாரிப்பாளர் கவிதா 'ராபர்' படம் பற்றிப் பேசும்போது,"உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருப்பதால் காட்சிகளும் உண்மைக்குப் பக்கத்தில் இயல்பாக இருக்கும். 'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.




ஒரு காட்சியை செம்மஞ்சேரி குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது படத்தில் திருடனாக நடித்துக் கொண்டிருந்த துணை நடிகரை உண்மையான திருடன் என நினைத்து அப்பகுதி மக்கள் தாக்கி விட்டனர். இது படத்தின் காட்சிகள் இயல்பாக இருப்பதற்கான ஒரு சின்ன உதாரணம். நகர்ப் பகுதிகளில் குறிப்பாக மாநகரங்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் பின்னணியில் கஞ்சா, மது மற்றும் போதைப் பொருள்களின் புழக்கம் இருப்பதாகக் குற்றவியல் சார்ந்த புள்ளி விவரம் கூறுகிறது .


இது போன்ற போதைப் பழக்கங்கள் இளைஞர்களை முன்னேற விடாமல் , சிந்திக்க விடாமல் குற்றச் செயல்கள் செய்யத் தூண்டுகிறது என்பது ஒரு கசப்பான உண்மை. அதைப் பார்ப்பவரை உணரவைக்கும்படி இந்தப் படம் அமைந்திருக்கும். இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மே மாதத்தின் இறுதியில்  ராபரை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

Short Story: வாழ நினைத்தால் வாழலாம்!

news

தங்க ஆரம் பூண்ட வெள்ளித் தாலம் உதய சூரியன்!

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

அதிகம் பார்க்கும் செய்திகள்