தென்தமிழ் தலையங்கம்: கரீபியனில் தொடங்கிய அமெரிக்கக் கதை.. கொலம்பஸ் தினம்!

Oct 12, 2026,10:43 AM IST

- சு.தா.அறிவழகன்


15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. ஐரோப்பிய நாடுகளுக்குக் கிழக்கு நாடுகளுடனான கடல்வழி வணிகம் மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக, வாசனைத் திரவியங்கள், பட்டு மற்றும் தங்கத்திற்காக இந்தியா மற்றும் சீனாவை (கிழக்கு ஆசியா) அடைய ஒரு மாற்று வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஐரோப்பியர்களுக்கு இருந்தது.


போத்துக்கீசியர்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்லும் வழியைத் தேடிக்கொண்டிருக்க, இத்தாலிய மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒரு துணிச்சலான திட்டத்தை முன்மொழிந்தார். 


"பூமி உருண்டையானது என்றால், மேற்கே கடல் வழியாகவே பயணம் செய்து ஆசியாவை எளிதில் அடையலாமே!" என்பதுதான் அது.


இதையடுத்து ஸ்பெயின் மன்னர்களின் ஆதரவைப் பெற்று, சந்தா மரியா, நிந்தா, பின்தா ஆகிய மூன்று சிறிய கப்பல்களுடன் மூன்று மாத கால கடினமான கடல் பயணத்திற்குப் பிறகு, 1492 அக்டோபர் நடுப்பகுதியில் அவர்கள் எதிர்பார்த்த அந்தப் பெரிய நிலப்பரப்பு கண்ணில் பட்டது.




1492 அக்டோபர் 12 அன்று, கொலம்பஸும் அவரது குழுவினரும் கரீபியன் கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் தரையிறங்கினர். அந்தத் தீவிற்கு 'சான் சால்வடார்' (அதாவது இரட்சகர் என்று பொருள்) என்று பெயரிட்டார் கொலம்பஸ். இது இன்றைய பஹாமாஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள வாட்லிங் தீவு (Watling's Island) என நம்பப்படுகிறது.


அங்கே வசித்த பூர்வகுடி மக்களைக் கண்ட கொலம்பஸ் ஆச்சரியமடைந்தார். ஆஹா.. என்று மகிழ்ந்த அவர், "நாம் ஆசியாவை, குறிப்பாக இந்தியாவின் கிழக்குக் பகுதிகளை அடைந்துவிட்டோம்!" என்று பிரகடனம் செய்தார். அதாவது அங்கிருந்த மக்களைப் பார்த்த அவருக்கு அது இந்தியாவின் ஒரு பகுதி என்ற தோற்றம் ஏற்பட்டது. 


அத்தோடு நில்லாமல், அங்கு கண்ட பூர்வகுடி மக்களை 'இந்தியர்கள்' என்றே அழைத்தார். ஆனால், அவர் கால் பதித்த அந்தப் பூமி இந்தியா அல்ல; மாறாக, ஐரோப்பியர்களுக்கு முற்றிலும் தெரியாத ஒரு புதிய கண்டம்.. அதுதாங்க அமெரிக்கா!


இதை விட என்ன சுவாரஸ்யம் என்றால், தன் வாழ்நாள் முழுவதும் தான் அடைந்தது ஆசியாதான் என்றும், அது இந்தியா மற்றும் சீனாவின் அருகில்தான் இருக்கிறது என்றும் உறுதியாக நம்பியே கொலம்பஸ் இறந்துபோனார் என்பதுதான். அவர் ஒரு புதிய உலகைக் கண்டுபிடித்தார் என்பது அவருக்குத் தெரியாமலேயே போய்விட்டது என்பது வரலாற்றுச் சோகம்.


ஆனால், அவரது அந்தத் தவறான நம்பிக்கையும் துணிச்சலான பயணமும்தான், மேற்கு மற்றும் கிழக்கு உலகங்களுக்கு இடையேயான தொடர்பை ஒட்டுமொத்தமாக மாற்றி, உலக வரலாற்றின் திசையையே மாற்றி அமைத்தது. ஒரு சிறிய தீவில் தொடங்கிய அந்தப் பயணம், ஒரு புதிய கண்டத்தின் கதவைத் திறந்தது வரலாற்றின் விசித்திரமான நகைச்சுவைகளில் ஒன்றாகும்.


அமெரிக்க கண்டத்தின் நிலப்பரப்பை கொலம்பஸ் கண்டறிந்த தினமான இன்று கொலம்பஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...2100-க்குள் மனித இனம் அழியும் அபாயம்: 'தி லான்செட்' எச்சரிக்கை

news

பலருக்கு வரலாறு மட்டுமே.. உங்களுக்கு வசீகரமும் இருக்கு.. சிலாகித்த வைரமுத்து..சொல்லிப் பார்த்த ரஜினி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு!

news

Spiritual Tour: சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 1)

news

பாரதி என் தோழன்

news

எது சகோதரத்துவம்?

news

"நீ பூஜைக்கு ஏற்ற புஷ்பமா? நான் தான் உனக்கு இஷ்டமா?

news

தென்தமிழ் தலையங்கம்: கரீபியனில் தொடங்கிய அமெரிக்கக் கதை.. கொலம்பஸ் தினம்!

news

"டிரம்ப் பெருங்கடல்" : பெருங்கடல்களின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்