சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் தங்கம், நேற்று ரூ. 6,690க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் உயர்ந்துள்ளது.
நேற்றும் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் தங்கத்தின் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது. உலகப் போர்களினால் நாட்டின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது. பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் தங்கம் விலை கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேலையில் தங்கத்தின் பயன்பாடும் அதிகரித்து வருவதினால், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்கம் விலை கடுமையாக உயரும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை...
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,690 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 ஆக உள்ளது.ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 ஆக உள்ளது. நேற்றும் இன்றும் சேர்ந்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,560 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,304 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,432 ஆக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.66,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,69,500க்கு விற்கப்படுகிறது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,040 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,30,400க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை...
தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்து உள்ளது.கடந்த 26ம் தேதி முதல் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்று வரை அதே விலையிலேயே இருந்து வந்தது. நேற்று உயர்ந்த வெள்ளியின் விலை தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 0.50 காசுகள் அதிகரித்து ரூ.96க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 768 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.960 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,600 ஆக உள்ளது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.96,000க்கு விற்கப்படுகிறது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
{{comments.comment}}