அமமுக போட்டியிட போகும் 11 தொகுதிகளின் உத்தேச பட்டியல்

Mar 24, 2026,06:22 PM IST

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வரும் நிலையில் என்டிஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் போட்டியிடு வாய்ப்புள்ள உத்தேச பட்டியல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகி சிறிது நேரத்திலேயே அமமுக போட்டியிடும் 11 தொகுதிகளுக்கான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.


டிடிவி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த முறை என்டிஏ கூட்டணியில் இணைந்து தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. என்டிஏ கூட்டணியில் அமமுக.,விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக.,விற்கு எதிராக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி அமைத்த தினகரனின் அமமுக 165 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் கணிசமான வாக்குகளை பெற்றதுடன், அதிமுக ஓட்டுக்களை பிரிக்கவும் செய்தார். ஏறக்குறைய 20 தொகுதிகளில் அதிமுக வெற்றி வாய்ப்பை தவற விட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது அமமமுக.,வின் ஓட்டுக்கள். 2021 சட்டசபை தேர்தலில் அமமுக 2.55 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது. இந்த முறை திமுக.,வை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கி உள்ளார்.


அமமுக தமிழத்தில் போட்டியிட வாய்ப்புள்ள 11 தொகுதிகள் குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

அமமுக போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகள் :




1. சைதாப்பேட்டை

2. சோளிங்கர் அல்லது திருப்பத்தூர்

3. பெரியகுளம்

4. பூந்தமல்லி

5. நாங்குநேரி

6. ஒட்டப்பிடாரம்

7. மதுரை மத்திய தொகுதி

8. தஞ்சை

9. காரைக்குடி

10. திருச்சி மேற்கு

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்