சென்னை : தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் இந்தி மொழியில் தகவல்கள் அச்சிடப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையையும் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விரிவான விளக்கமளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம்:
கரூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத்திரை உறைகளில் இந்தி இடம்பெற்றிருந்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், "கரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்கள் பொதுவாக மத்திய சிறையில் இருந்து பெறப்படுபவை ஆகும். மேலும், கோவை சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்பே இந்தி மொழியிலும் மாத்திரை உறைகளை அச்சிட அனுமதி வழங்கப்பட்டிருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், அதாவது டிசம்பர் 31, 2025 அன்று மாத்திரை கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் மூலம் 4 லட்சம் கவர்கள் அச்சிட ஆணை பிறப்பித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மாத்திரை கவர் வடிவமைப்பிலோ அல்லது மொழியிலோ தற்போதைய அரசு எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி:

"தங்கள் ஆட்சிக் காலத்திலேயே இந்தி மொழியிலான மாத்திரை உறைகளை அச்சிட அனுமதித்து, புழக்கத்திற்கும் விட்டுவிட்டு, இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடமிட்டு த.வெ.க அரசு மற்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது பழிபோடுவது என்ன மாதிரியான அரசியல்?" என்று அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். திமுகவினர் தங்கள் ஆட்சியில் இந்த விவகாரம் புழக்கத்திற்கு வந்த போது வாய்மூடி மெளனியாக இருந்துவிட்டு, இப்போது அரசியல் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார்.
உடனடி நடவடிக்கை :
தற்போதைய நிர்வாகம், கிடங்கில் உள்ள தேவையின் அடிப்படையில் மட்டுமே கவர்களைக் கொள்முதல் செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், மாத்திரை கவரில் இந்தி இடம்பெற்றுள்ள விவகாரம் அரசின் கவனத்திற்கு வந்த உடனேயே கரூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு இடங்களிலும் அந்த மாத்திரை உறைகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், இனி வரும் காலங்களில் தமிழ் மொழியில் மட்டுமே விவரங்கள் அச்சிடப்பட்டு நோயாளிகளுக்கு மாத்திரை கவர்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் உறுதியளித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!
Tuesday Thoughts: பெண்களோட கம்பீரம் எப்படி இருக்கணும் தெரியுமா?
டெல்லியில் பரபரப்பு: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு!
மாத்திரை கவரில் இந்தி அச்சிடப்பட்ட விவகாரம்: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
போவோமா.. ஊர் கோலம்.. ஒரு நிமிடக் கதை (29)
"அவ அவங்க அப்பா மாதிரி".. அப்பா!
தென்தமிழ் தலையங்கம்: ஜனநாயகத்தின் மூச்சுக்காற்று.. கேட்டால்தான் தருவதா அரசாங்கம்?
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
{{comments.comment}}