சென்னை: தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விசேஷங்கள் நிறைந்த தை மாதத்தில் தங்கம் விலை குறைந்திருந்தது.இந்த விலை குறைவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்பதில் ஐயமில்லை. தற்போதைய மாசி மாதத்தில் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது. மாசி மாதத்தில் சற்று உயர்ந்திருந்த தங்கம் இன்று அதிரடியாக ஏற்றம் கண்டது. ரூ.100 அல்ல ரூ.200 அல்ல சவரனுக்கு ரூ.800 அதிகரித்தது.இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5940 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 100 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.800 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 47520 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6372 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.50976 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8 மட்டும் தான் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று இருந்த வெள்ளியின் விலையில் இருந்து 80 காசுகள் உயர்ந்து இன்று 1 கிராம் வெள்ளி விலை 77 ரூபாயக உள்ளது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 616 ஆக உள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு கூடினாலும் அதன் தேவை குறைய போவது கிடையாது. தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். தங்கத்தின் தேவை அதிகரித்ததன் காரணமாக விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச அரசியல் சூழல், நகையில் முதலீடு ஆகியவற்றின் காரணத்தினாலும் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!
Letter to my favourite toy as a kid
Day of celebrating the selfless service
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
{{comments.comment}}