12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 24, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்

Nov 24, 2025,10:26 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், கார்த்திகை 08 ம் தேதி திங்கட்கிழமை

சதுர்த்தி, வாஸ்து நாள். இன்று இரவு 07.23 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 08.40 வரை பூராடம் நட்சத்திரமும், பிறகு உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. இன்று இரவு 08.40 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - ரோகிணி, மிருகசீரிடம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, உத்யோகத்தில் சில நிறை குறைகள் இருக்கும். எனவே, அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்கள் மேற்படிப்புக்காக கடல் கடந்து செல்லும் யோகம் உள்ளது. பெரிய மனிதர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு மற்றும் ஆதரவு கிடைக்கும். மாமனாரின் உடல்நலம் பாதிக்கப்படலாம். அக்கம் பக்கத்தினரிடம் அளவோடு பழகுவது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச் ஆகும்.


ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்கள் இன்று மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இன்று சந்திராஷ்டமம் உள்ளது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ரோஸ் ஆகும்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆசிரியர்களிடம் பாராட்டைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. புதுமணத் தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவார்கள். அதற்கான வேலைகளை இன்று தொடங்குவார்கள். உடல் நலம் சிறக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை ஆகும்.


கடகம் - கடக ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்படலாம். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கருப்பு ஆகும்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலைச் சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கி நல்ல முடிவுகள் ஏற்படும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் மற்றும் தடைகள் நீங்கும். உங்களுக்குரிய பங்குத் தொகை வந்து சேரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை ஆகும்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, பதவி உயர்வு பற்றிய செய்திகள் வரும். நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். வெளியூர் டிரான்ஸ்பர் கிடைக்கும். பெண்கள் தங்கள் தோழிகளிடம் மனம்விட்டுப் பேச நேரம் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். தேகம் பளிச்சிடும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும்.


துலாம் -   துலா ராசிக்காரர்களுக்கு, பிள்ளைக்கு வசதியான இடத்தில் இருந்து நல்ல சம்பந்தம் கூடிவரும். மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் அதிக முயற்சியின் பேரில் இடம் கிடைக்கும். தம்பதிகள் ஒன்றிணைவார்கள். குடும்ப உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட வழக்கு சம்பந்தமாக சற்று விட்டுக் கொடுத்து சமாதானமாகப் போவது நலம் தரும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் ஆகும்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, உத்யோகம் தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாகச் செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள். வியாபாரம் சீராக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை ஆகும்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் நன்மையைத் தரும். மார்க்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் வேண்டிய இலக்கினை எட்டுவார்கள். வழக்கு சாதகமாகும். பிள்ளைகள் நன்கு படிப்பார்கள். காதலர்களுக்குப் பெரியவர்களின் சம்மதம் கிடைக்கும். பல்வலி வந்து போகும். உடல் நலத்தில் கவனம் செலுத்தக்கூடும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல் ஆகும்.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை. எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். மகளுக்குத் திருமணம் கூடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை ஆகும்.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, வியாபாரிகளுக்குப் பயணங்களால் லாபம் தரும் நாளாகும். புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் இட மாற்றங்களுக்கு வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகளுக்கும் இடம் உண்டு. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பொன்னிறம் ஆகும்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள். பல ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்