தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 28 ம் தேதி, வெள்ளிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், கார்த்திகை 12 ம் தேதி வெள்ளிக்கிழமை
அஷ்டமி. இன்று இரவு 07.16 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. இரவு 10.45 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.14 வரை மரணயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பெற்றோர்களுக்கு ஆதரவாக இருப்பது நல்லது. வேலை செய்பவர்களுக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை வந்துச் செல்லும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக முயற்சி செய்தவர்களுக்கு வெளிமாநிலம், அயல்நாட்டில் வேலை கிடைக்கும். வேலையில் நெருக்கடி தந்த அதிகாரி மாறுவார். வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவால் முன்னேறுவார்கள். ரசனைக்கேற்ப வரன் அமையும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு தாய்வழி சொத்து வந்து சேரும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள், பிரச்சனைகள் தீரும். வேலை கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளலாம். புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனைப் பிரார்த்தித்துக்கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கிரே.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும். அமைதி காக்கவும். அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு வெளியிடங்களுக்குச் செல்லும்போது விலை உயர்ந்த தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். மொத்தத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். உயர்கல்வியில் நாட்டம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் ஊதா.
துலாம் - துலா ராசிக்காரர்களுக்கு நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அவர்களின் நட்பால் ஆதாயமடைவார்கள். நல்ல வரண் கிட்டும். பண விஷயத்தில் கறாராக இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக கேரண்டர் கையொப்பமிட வேண்டாம். அவ்வப்போது மறதி, முன்கோபம் வந்து போகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் செல்வார்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவார்கள். புதுத் தொழில் தொடங்குவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். உடல் நலம் சிறப்பாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு பழைய கசப்பான சம்பவங்களை நினைத்துப் பார்த்து அச்சப்படாதீர்கள். சகோதர, சகோதரிகள் உறுதுணையாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்த நண்பர், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச்.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு ஏற்றுமதி-இறக்குமதி, உணவு, மருந்து, வாகன உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். பழுதான வாகனம் சரி செய்வார்கள். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம். நட்பு வட்டம் விரிவடையும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். வாகனம், வீடு பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பிரபலங்கள் உதவுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். நீராகாரம் குடியுங்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் ஈட்டுவார்கள். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவார்கள். கடையை விரிவுபடுத்துவார்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். ஒரு சிலர் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு கடையை மாற்றுவார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!
A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!
மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!
True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?
{{comments.comment}}