தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆடி 17ம் தேதி சனிக்கிழமை
காலை 07.47 வரை அஷ்டமி திதியும் பிறகு நவமி திதியும் உள்ளது. இன்று நாள் காலை 04.51 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 12.15 முதல் 01.30 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
மேஷம் - அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம். அதனால் சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
ரிஷபம் - குடும்பத் தலைவிகள் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை வரலாம். வியாபாரத்தில் எந்த தடையும் இருக்காது. போட்ட திட்டங்கள் கொஞ்சம் தள்ளி போகலாம். மனம் தளர வேண்டாம். பொறுமையாக இருங்கள். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் டெபாசிட் செய்வீர்கள். உடலில் கொஞ்சம் அசதி இருக்கும்.
மிதுனம் - நீண்ட நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த பூர்வீக சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமாக முடியும். வியாபாரிகள் விற்பனையை அதிகரிக்க புதிய திட்டங்கள் போடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். அதனால் ஒரு முறைக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. தம்பதிகளுக்குள் ஒற்றுமை குறையாது.
கடகம் - வேலை செய்பவர்களுக்கு வேலையில் பளு கூடும். பிள்ளைகள் பெற்றோரின் பேச்சை கேட்பார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆபரேஷன் இல்லாமல் மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். வியாபாரிகளின் தேவைகள் பூர்த்தியாகும்.
சிம்மம் - பணம் நாலாபக்கமும் வந்து சேரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். காதலர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் நினைத்ததை விட அதிக லாபம் கிடைக்கும். எதிர்பாராத ஒரு சந்திப்பு நடக்கும். அது உங்களுக்கு சந்தோஷத்தை தரும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
கன்னி - பிள்ளைகளிடம் அனுசரித்து போவது நல்லது. அவர்களிடம் கொஞ்சம் தட்டி கொடுத்து அவர்கள் வழியே செல்வது நல்லது. பணம் அதிகமாக வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். திருமண பேச்சு வார்த்தை ஆரம்பிப்பீர்கள். உடல் மினுமினுக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
துலாம் - பிரபலமானவர்கள் உங்களுக்கு நண்பர்களாக ஆவார்கள். அவர்களால் உங்களுக்கு பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வயதானவர்கள் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவது நல்லது. வேலை செய்பவர்கள் மற்றவர்களின் விடுமுறையால் அவர்களின் வேலையை சேர்த்து பார்ப்பீர்கள்.
விருச்சிகம் - கலைஞர்களின் கனவு நிறைவேறும். பெரியவர்கள் வெளியில் போகும்போது யாராவது துணையுடன் போவது நல்லது. கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். மூத்த சகோதரர் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
தனுசு - வழக்குகளில் ஒரு திருப்பம் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். திருமண பேச்சு வார்த்தை ஆரம்பிப்பீர்கள். பெண் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். உறவினர்கள் வீட்டிற்கு வந்து போவார்கள்.
மகரம் - கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வந்து போகும். ஆனால் பிரிவினைக்கு இடம் இல்லை. விட்டுக்கொடுத்து போவது அவசியம். "இந்நாள் முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும்." புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள். சகோதர உறவு மேம்படும். வியாபாரம் நன்றாக இருக்கும்.
கும்பம் - இளைஞர்களுக்கு தேவையில்லாத எண்ணங்கள் வந்தால் அதை தவிர்க்கவும். ஆக்கப்பூர்வமான வேலைகளில் கவனத்தை செலுத்தவும். குடும்ப தலைவிகள் வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். உங்கள் வேலைகளை போன் மூலமாகவே முடித்து கொள்வீர்கள். தம்பதிகளுக்குள் அன்பு அதிகரிக்கும்.
மீனம் - வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. தம்பதிகளுக்குள் வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமாதானம் ஆவார்கள். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு வைரமுத்து கோரிக்கை!
இன்று ஒரு கவிதை.. இனிமைத் தமிழ் மொழி எமது!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தங்கம் விலையில் அதிரடி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
{{comments.comment}}