12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 06, 2025... இன்று அதிர்ஷ்டம் தேடி வரும்

Oct 06, 2025,10:21 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், புரட்டாசி 20 ம் தேதி திங்கட்கிழமை

பவுர்ணமி. காலை 11.42 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பவுர்ணமி திதியும் உள்ளது. காலை 06.06 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 5 முதல் 6 வரை

கெளரி நல்ல நேரம் : 09.15 முதல் 10.15 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மைகள் உண்டாகும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்கள். வர வேண்டிய பணம் வசூலாகும். பிரிந்த உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிரிகள் தங்கள் தவறை உணர்வார்கள். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வார்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல் உற்சாகமாக இருக்கும். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உடல் பொலிவுடன் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால், கோபப்படாமல் அமைதியாகக் கையாள வேண்டும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வார்கள். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணம் தடைபடும். மருத்துவர்கள் செழிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால், மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரிய தடைகள் இருப்பதால், புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். உடல் வலிமை உண்டாகும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு பெறும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.


கும்பம் -  கும்ப ராசிக்காரர்களுக்கு தேவையில்லாத மனபயம் விலகும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். திருமணம் கோலாகலமாக நடக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். பிள்ளைகள் தங்கள் பேச்சினைக் கேட்பார்கள். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீர்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்