12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 07, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Dec 07, 2024,09:37 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 07 ம் தேதி, சனிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய பஞ்சாங்கம் :

குரோதி வருடம், கார்த்திகை 22 ம் தேதி சனிக்கிழமை
இன்று காலை 09.42  வரை சஷ்டி, அதற்கு பிறகு சப்தமி. மாலை 03.52 வரை அவிட்டம், பிறகு சதயம். மாலை 03.52 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம்.

நல்ல நேரம்: காலை - 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை 

சந்திராஷ்டமம் - புனர்பூசம், பூசம்

இன்றைய ராசிபலன் :



மேஷம் - இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீங்கள் துணிச்சலுடன் எடுக்கும் சில முடிவுகள் நல்ல பலனை தரும். அலுவலகத்தில் இணக்கமான சூழல் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம் - சாதகமான பலன்கள் தரும் நாளாக இருக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு இலக்குகளை அடைவீர்கள். முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்துடன் ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். நிதி நிலையை மகிழ்ச்சி அளிக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

மிதுனம் - எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். இறைவழிபாடு மன ஆறுதலை தரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  செலவுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

கடகம் - எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செலவுகளால் கையிருப்பு கரையலாம். ஆரோக்கியம் தொடர்பான கவலைகள் ஏற்படும்.

சிம்மம் - வளர்ச்சி தரக் கூடிய நாள். திறமை வெளிப்படும். சிறப்பாக பணியாற்றி மேலதிகாரிகளின் பாராட்டை பெறலாம். வாழ்க்கை துணையிடம் இனிமையாக பேசுவதின் மூலம் குடும்பத்தில் அன்பு பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி - சாதகமான நாளாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். வாழ்க்கை துணையிடம் அன்பாக நடந்து கொள்வதால் புரிதல் மேம்படும். பணவரவு அதிகரிக்கும் சேமிப்பு உயரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

துலாம் - பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த செயலை செய்வதாக இருந்தாலும் நன்கு சிந்தித்து, கவனமுடன் செய்ய வேண்டும். பணியில் கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனையால் மனதிலும் கவலை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கலாம். தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் - எதிலும் சிந்தித்து செயல்படுவது சிரமங்களை குறைக்கும். உடன் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வேலைபளு அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் வீண் குழப்பங்களை தவிர்க்கலாம். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.

தனுசு - முயற்சிகள் வெற்றி அடையும். பணியிடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களை பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கிடைக்கும். இதனால் சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


மகரம் - இறைவழிபாடு மன ஆறுதலை தரும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். பணிகளில் தாமதம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பயணத்தால் செலவுகள் அதிகரிக்கலாம். முதுகு வலி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் - முயற்சிகள் சாதகமான பலன்களை தராது. செயல்களில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளின் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டிற்கான செலவுகள் செய்வதால் கையிருப்பு குறையும். வாழ்க்கை துணையுடனான ஒற்றுமை பாதிக்கப்படலாம்.


மீனம் - மனக்குழப்பம் அதிகரிக்கலாம். மற்றவர்களிடம் பேசும் போதும் யோசித்து பேச வேண்டும். பணியிடத்தில் வளர்ச்சி வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திற்காக குறிப்பிட்ட தொகையை செலவு செய்வீர்கள்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

அ முதல் ஃ வரை... எல்லாமே அம்மா அம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்