12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 08, 2025... இன்று மாற்றங்கள் தேடி வரப் போகும் ராசிகள்

Nov 08, 2025,10:34 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு நவம்பர் 08 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஐப்பசி 22 ம் தேதி சனிக்கிழமை

சங்கடஹர சதுர்த்தி. இன்று பகல் 12.31 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 04.31 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 04.31 வரை மரணயோகமும், பிறகு  சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07. 30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த நாள் வேலையில் அதிக கவனம் செலுத்தி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கான காலமாக அமையும். பணவரவு அதிகமாக இருக்கும். சுய தொழில் செய்யும் அழகு கலை நிபுணர்களுக்கு லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. உடல் நலமும் சிறப்பாக இருக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்ச் ஆகும்.


ரிஷபம் -  ரிஷப ராசிக்காரர்களுக்கு, குடும்பத் தலைவிகள் தங்கள் நிர்வாகத் திறனைப் பார்த்து கணவர்கள் வியந்து உங்களிடம் சரணடைவார்கள். கணவர் வீட்டார் வீட்டிற்கு வந்து போகும் சூழல் அமையும். சுய தொழில் செய்பவர்கள் புதிய புதிய திறன்களை வளர்த்துக் கொள்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் அதிக ஆர்வம் ஏற்பட்டு, அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு, உத்யோகத்தில் கணினி துறையில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். மனைவியின் தம்பி வகை உறவினர்களிடம் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்று வருவார்கள். பல் வலி வந்து நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.


கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு, அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்யும் பெண்கள் வங்கி கடனுக்காக தங்கள் குழுவுடன் சேர்ந்து அரசு வங்கியை அணுகுவார்கள். அக்கம் பக்க வீட்டார் உங்களைப் பாராட்டுவார்கள். உடல் நலனில் ஒற்றைத் தலைவலி வந்து போகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வான்நீலம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு, வியாபாரிகள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தம்பதிகளிடையே அன்பு பலப்படும். மாணவமணிகள் பகுதி நேரமாக விளையாட்டுத் துறையில் அக்கறை செலுத்துவார்கள். உடல் நலம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.


கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். தம்பதியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், உடனுக்குடன் சமாதானம் அடைவார்கள். பணம் தாராளமாக வரும். நாத்தனார் தொல்லை இருக்காது. பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். உத்யோகஸ்தர்களுக்கு ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.


துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு, வேலைச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதனைச் சரிவர செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் அன்பு அதிகரிக்கும். மாணவர்கள் சற்று அலட்சியப் போக்கை நிறுத்திவிட்டு நன்கு படிக்க வேண்டும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.


விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு, இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் நீலம்.


தனுசு -  தனுசு ராசிக்காரர்களுக்கு, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தங்கள் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். குடும்பத் தலைவிகள் அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் செலவு செய்வது நல்லது. மாமனார் மாமியார் தங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். மாணவர்கள் நன்கு படிப்பார்கள். இடுப்பு, கை, கால் வலிகள் ஏற்பட்டு நீங்கும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.


மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, இன்றைய நாளில் தாங்கள் வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். நெடுநாள் காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவசியம். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் ஊதா.


கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, பெண்களுக்குப் பிடித்த விஷயங்கள் நடக்கும் நாள். ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் அடுத்த நிலைக்குப் பதவி உயர்வைப் பெறுவார்கள். தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தந்தைவழி சொத்து கைக்கு வரும். ஷேர் மூலமாக பணம் வரும். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் கனவு நினைவாகும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.


மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அந்த வேலைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொண்டு செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரம் செழிக்கும். தம்பதிகளிடையே இருந்து வந்த பிணக்குகள் மறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் நலம் மேம்படும். இவர்களுக்கான அதிர்ஷ்ட நிறம் பச்சை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்