12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 10, 2025... இன்று நல்ல செய்தி தேடி வரும்

Sep 10, 2025,09:41 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆவணி 25ம் தேதி புதன்கிழமை

சங்கடஹர சதுர்த்தி. மாலை 06.44 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தியை திதியும் உள்ளது. இன்று இரவு 07.42 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 9 முதல் 10 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - ஆன்லைன் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைஞர்கள் காதலில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப கடமைகளை முடிப்பது நல்லது. குடும்பத்தில் வாக்குவாதம் வந்து போகும். விட்டுக்கொடுத்து போவது நல்லது. 


ரிஷபம் - வேலை செய்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நண்பர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். உடன்பிறந்தவர்கள் மூலம் நன்மை அடைவீர்கள். சுப காரியங்கள் தள்ளிப்போகும். இணையதளம் மூலம் வேலைகளை முடிப்பீர்கள். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். யாருக்கும் உறுதிமொழி கொடுக்க வேண்டாம். கடன் பிரச்சினை தீரும். 


மிதுனம் - ஆன்மீகத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்த பழைய பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் உதவி செய்வார்கள். குடும்பத்தில் வாக்குவாதம் வந்து போகும். புத்தகம் படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொலைபேசி மூலம் நட்பு அதிகரிக்கும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். சுற்றுலாவை தள்ளிப் போடுவீர்கள். மருத்துவர்களுக்கு நல்ல நேரம். 


கடகம் - இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலையில் உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் நலம் தேறும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். அலுவலக விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். 


சிம்மம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் கடவுளை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. இன்று பல தடைகள் வரலாம். அதனால் புதிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும். அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


கன்னி - உழைப்பால் முன்னேற்றம் அடைவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருவார்கள். பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.


துலாம் -   காய்கறி வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பயணத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். தம்பதிகளிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியாக இருந்தால் தப்பிக்கலாம். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும்.


விருச்சிகம் - வேலைகள் தள்ளிப் போகும். காதல் வரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். முகம் வசீகரமாகும்.  


தனுசு -  இன்று நண்பர்கள் உதவி செய்வார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். வழக்கறிஞர்களுக்கு நல்ல நேரம். வேலையில் உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். அரசியலில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. முகம் புதுப்பொலிவு பெறும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


மகரம் - வேலைப்பளு குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். பணம் வரவு அதிகரிக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். உறவினர்கள் நலம் விசாரிப்பார்கள். சேமிப்பு அதிகரிக்கும். 


கும்பம் -  எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பண விஷயத்தில் சிக்கனமாக இருக்க வேண்டும். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதலர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவு எடுப்பார்கள். 


மீனம் - நண்பர்களுடன் சண்டை போட வேண்டாம். பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். பணம் வரவு தாமதமாகும். வேலையில் அமைதியான சூழ்நிலை இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்