12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 14, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

Feb 14, 2025,10:08 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ம் தேதி, வெள்ளிக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 02 ம் தேதி வெள்ளிக்கிழமை

இரவு 10.21 வரை துவிதியை, பிறகு திரிதியை. இரவு 11.41 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 10 முதல் 10.30 வரை; மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - காலை 3 முதல் 04.30 வரை


சந்திராஷ்டமம் - திருவோணம், அவிட்டம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  பதற்றம் நிறைந்த நாள். ஆன்மிக வழிபாடு ஆறுதலை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் மோதல்கள் ஏற்படலாம். வார்த்தைகளில் நிதானம் வேண்டும். எதிலும் அலட்சியம் வேண்டாம். பணப்புழக்கம் போதிய அளவு இருக்காது. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். 


ரிஷபம் - முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கலாம். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பொறுப்புகள் அதிகரிப்பதால் செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டில் உள்ளவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


மிதுனம் - சிறப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். அலுவலகத்தில் உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சேமிப்புகள் உயரும்.


கடகம் -  செல்களில் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகளில் கவனம் தேவை. வாழ்க்கை துணையிடம் பேசும் போது நிதானம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


சிம்மம் -  உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க வேண்டும். மனக் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். மற்றவர்களிடம் கோபத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். பணிச்சுமை கவலை அளிப்பதாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.


கன்னி -  முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதையும் பொறுமையுடன் செய்ய வேண்டும். கடின உழைப்பால் முன்னேற்றம் காண வேண்டும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. வாழ்க்கை துணையுடன் வீண் விவாதங்கள் ஏற்படலாம். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் அலட்சி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.


துலாம் -  அனுகூலமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி, வளர்ச்சி அதிகரிக்கும். பணிகளை விரைந்ஐ முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள். வாழ்க்கையிடம் அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிப்புகள் உயரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் ஏற்படலாம். சுற்றி இருப்பவர்களின் ஆதரவு நம்பிக்கையை தரும்.


விருச்சிகம் -  வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படலாம். வாழ்க்கை துணையிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.


தனுசு - பதற்றம் நிறைந்த நாளாக இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் வார்த்தைகளில் தானம் அவசியம். பணிகளை செய்ய முடியாமல் தடைகள் ஏற்படலாம். வாழ்க்கையை அனுசரித்து செல்ல வேண்டும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிற பிரச்சனைகள் ஏற்படலாம்.


மகரம் -  கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதனால் தன்னம்பிக்கை குறையும். பணிகளில் தாமதம் ஏற்படலாம். இதனால் கவலையுடன் காணப்படுவீர்கள். மனக்குழப்பங்களை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். 


கும்பம் -   மகிழ்ச்சியான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள், புதிய முயற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மற்றவர்களிடம் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணை மீதான அன்பு அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு உயரும். தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.


மீனம் - முயற்சிகளில் வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். நன்மைகள் அதிகரிக்கும். பணியிடத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். வாழ்க்கை துணையுடன் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்ற வருவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்களின் செயல்கள் மற்றவர்களால் பாராட்டப்படும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் வரும்.. பாஜக கூட்டணி குறித்து சொல்ல முடியாது:டாக்டர் ராமதாஸ்!

news

35 புதிய கல்லூரிகள் புதிதாக திறுந்தும் ஒரு ஆசிரியர் கூட புதிதாக நியமிக்கவில்லை:அன்புமணி ராமதாஸ்

news

ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

தவெக.,வில் இணைந்த அதிமுக, திமுக முன்னாள் எம்எல்ஏ.,க்கள்.. விஜய் தரும் மெசேஜ் என்ன?

news

IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

news

Out Of Controlலில் இருக்கும் பாலியல் SIRகளை Control செய்யவது எப்போது?: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

news

தவெகவுடன் கூட்டணி குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்... கூட்டணி ஆட்சி வந்தால் நல்லது; பிரேமலதா

news

இன்று வைகாசி விசாகம் 2025 : முருகனுக்கு இந்த நைவேத்தியம் படைத்தால் வாழ்க்கையே மாறும்

news

ராஜமெளலி படத்தில் இணைந்த மாதவன்.. என்ன ரோல் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்