தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி, செவ்வாய்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஆவணி 03ம் தேதி செவ்வாய்கிழமை
ஏகாதசி. மாலை 04.42 வரை ஏகாதசி திதியும் பிறகு துவாதசி திதியும் உள்ளது. இன்று அதிகாலை 03.54 வரை மிருகசீரிஷம் நட்சத்திரமும், பிறகு திருவாதிரை நட்சத்திரமும் உள்ளது. இன்று அதிகாலை 03.54 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 06.03 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்
மேஷம் - திட்டவட்டமான முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அரசியலில் செல்வாக்கு உயரும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் வரும்.
ரிஷபம் - எதிர்காலத்திற்காக ஒரு தொகையை சேமிப்பீர்கள். வீட்டுக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த சில திட்டங்கள் தீட்டுவீர்கள்.
மிதுனம் - ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். தாங்கள் விரும்பிய காரியத்தை முடிக்க தன்னம்பிக்கையும், துணிச்சலும் வரும். வீண் கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள்.
கடகம் - வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
சிம்மம் - கௌரவம் அதிகமாகும். உடல் நிலையில் அவ்வப்போது சிறுசிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். வழக்குகள் சாதகமாகும். அரசு வழிகளில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் நற்பெயரும் கிடைக்கும். உயர் படிப்பிற்காக வெளிநாடு செல்வர்.
கன்னி - பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டினை அழகுபடுத்துதல் மற்றும் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் பணிகளில் வேகமடைவீர்கள். எதிர்பாராத பயணங்களால் தங்களுக்கு பெரும் தொகை கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
துலாம் - சொந்த வீடு வாங்க முயற்சித்தவர்களுக்கு இடம் பார்க்க செல்வீர்கள். அது தங்களுக்கு பிடித்தபடி அமையும். தம்பதிகளின் ஒற்றுமைக்கு குறை இருக்காது. குழந்தைக்காக காத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு கர்ப்பம் தரிக்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும்.
விருச்சிகம் - இன்று அனுஷம் நட்சத்திரக்காரருக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.
தனுசு - அரசியலில் செல்வாக்குக் கூடும். புது வேலைக் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும்.
மகரம் - நீங்கள் யாரையும் தேடிச் சென்று பார்க்கும் இயல்பில்லாதவர். ஈகோவை பார்க்க வேண்டாம். தங்களுக்கு வேண்டும் என்றால் நாம்தான் அணுக வேண்டும் என்பதை புரிந்து கொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் நட்புறவாக பழகுங்கள்.
கும்பம் - உத்யோகத்தில் சம்பள உயர்வுக்குண்டான செய்தி கிடைக்கும். குடும்பத் தலைவிகளை மதிக்கப்படுவீர்கள். உடலில் கை, கால், மூட்டு வலி வந்து போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
மீனம் - நிலம், வீடு புதிய சொத்து வாங்குவீர்கள். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும்.
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
தொடர்ந்து 10வது நாளாக குறைந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைவு!
Weight loss tips: எந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்?
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார்
முருங்கைக்காய் போலவே.. முருங்கைப் பூவில் சூப்பர் குணம் இருக்கு.. பல பிரச்சினைகளுக்குத் தீர்வு
சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி உறுதி.. இந்தியா கூட்டணியின் போட்டி சம்பிரதாயமாகவே இருக்கும்!
Sri Krishna.. தீராத விளையாட்டுப் பிள்ளை!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 18, 2025... இன்று நல்ல காலம் பிறக்குது
{{comments.comment}}