12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 20, 2025... இன்று பணம் கைக்கு வரும் நாள்

Nov 20, 2025,10:46 AM IST
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.

2025 ஆம் ஆண்டு நவம்பர் 20 ம் தேதி, வியாழக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


விசுவாவசு வருடம், கார்த்திகை 04 ம் தேதி வியாழக்கிழமை
சர்வதேச குழந்தைகள் தினம். இன்று பகல் 12.31 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 11.53 வரை விசாகம் நட்சத்திரமும், பிறகு அனுஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று முழுவதும் சித்தயோகம் உள்ளது. 

நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 09.30 வரை

சந்திராஷ்டமம் - ரேவதி, அஸ்வினி






மேஷம் - மேஷ ராசிக்காரர்கள் இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்க்கவும். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும் என்பதால், புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது சிறந்தது. இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வெளியூர் பயணங்கள் தடைபடலாம். மருத்துவர்கள் செழிப்படைவார்கள். தொலைபேசி மூலம் நட்பு வலுப்பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். யோகாவில் மனம் லயிக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சீரடையும். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

கடகம் - கடக ராசிக்காரர்கள் தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை பல கிளைகளாக விரிவுபடுத்துவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிரிந்த உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். வர வேண்டிய பணம் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உடலில் உற்சாகம் வெளிப்படும். நண்பர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவார்கள். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

கன்னி - கன்னி ராசிக்காரர்கள், மனைவி உங்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியைக் கடைப்பிடிக்கவும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.

துலாம் -   துலாம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வார்கள். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.

விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பார்கள். பிள்ளைகளால் ஆறுதலடைவார்கள். திருமணம் கோலாகலமாக நடக்கும். மார்க்கெட்டிங் பிரிவினருக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத மனபயம் விலகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.

தனுசு -  தனுசு ராசிக்காரர்கள் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வார்கள். அவர்கள் உங்களுக்குக் கைகொடுப்பார்கள். முகத்தில் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவார்கள். அரசியலில் நாட்டம் கூடும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

மகரம் - மகர ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக கையாள வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வார்கள். வீட்டில் சுபகாரியம் நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.

கும்பம் - கும்ப ராசிக்காரர்கள் நண்பர்களுடன் ஒற்றுமையாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம் பக்கத்தாரிடம் நட்பு வலுப்பெறும். உடல் வலிமை உண்டாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.

மீனம் - மீன ராசிக்காரர்கள் சேமிப்புத் திட்டத்தில் இணைவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். பண வரவு தாமதப்படும். உத்தியோகத்தில் அமைதியான போக்கு காணப்படும். நண்பர்களிடம் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

news

சிவகங்கை குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன்.. லாவகமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்!

news

A Vency Raj short story: முடியுமா என்னால்?.. ஒரு வினாவே விடையாகும் தருணம்!

news

மனங்களில் வாழும் ரங்கா மாமா.. Ranga Mama – The Guruswamy of Our Hearts!

news

True Wisdom.. உண்மையான ஞானம் எதிலிருந்து நமக்குக் கிடைக்கும்?

அதிகம் பார்க்கும் செய்திகள்