12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

Jul 26, 2025,10:49 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஜூலை 26 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆடி 10ம் தேதி சனிக்கிழமை

அதிகாலை 12.58 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. மாலை 06.11 வரை ஆயில்யம் நட்சத்திரமும், அதன் பிறகு மகம்  நட்சத்திரமும் உள்ளது. இன்று மாலை 06.11 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 12.15 முதல் 01.15 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை 

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - புதிய வாகனம் வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். குடும்பத்தில் சில சலசலப்புகள் வந்து நீங்கும். உணவில் கவனம் தேவை. வேலையில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள். வேலைப்பளுவால் தலைவலி வரலாம். 


ரிஷபம் - பழைய வீட்டைச் சீர் செய்வீர்கள். பணவரவு இருக்கும். வியாபாரிகள் முதலீட்டை அதிகரிப்பார்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவர். வேற்று மதத்தவர் உதவுவார். செலவு கூடும், சிக்கனம் தேவை.


மிதுனம் - எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் தீரும். குடும்பப் பிரச்சினை தீரும். மாணவர்கள் எழுதிப் பார்ப்பது நல்லது. உடல் நலம் மேம்படும்.


கடகம் - பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். குடும்பத் தலைவிகள் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். தொலைந்து போன சொத்து ஆவணங்கள் கிடைக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 


சிம்மம் - பூர்வீக சொத்து பணம் கைக்கு வரும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பணம் பெருகும். சகோதரர் மீது அன்பு அதிகரிக்கும். மார்க்கெட்டிங் துறையினருக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். உடல் வலி நீங்கும். வீட்டை புதுப்பிப்பீர்கள்.


கன்னி - பண விஷயத்தில் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனைவி வீட்டாரிடம் அனுசரித்து செல்லுங்கள். வீட்டில் தயாரிக்கும் பொருட்கள் நல்ல லாபம் தரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை.


துலாம் -   வழக்கில் திருப்பம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவு ஏற்படும். செல்லப் பிராணிகளுக்கு மருத்துவ செலவுகள் வரலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.


விருச்சிகம் - குடும்பத்துடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். கணவன் வழி உறவினர்கள் அன்பு பாராட்டுவர். உடல்நிலையில் சிறு பாதிப்பு வரலாம். வீடு, நிலம் விற்பனை முயற்சிகள் வெற்றி அடையும். செல்வாக்கு பெருகும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். 


தனுசு -   பூராடம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் வரலாம். இறைவனை பக்தியுடன் கும்பிடுவது நல்லது. தியானம் செய்யவும்.


மகரம் - வழக்கறிஞர்களுக்கு வழக்குகள் சாதகமாகும். தடைபட்ட திருமணம் நடக்கும். வியாபாரிகள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். வேலையில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். உற்சாகம் வெளிப்படும்.


கும்பம் -  அதிக சம்பளத்திற்காக புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத் தலைவிகள் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கணவர் மதிப்பளிப்பார். மாமியாருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.


மீனம் - நண்பர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். கல்லூரி மாணவிகளின் கனவு பலிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பர். வெளியிடங்களில் உணவு உட்கொள்ள வேண்டாம். வெளிநாட்டுப் பயணம் சிறப்பாக அமையும். மாணவர்கள் திறமை அதிகரிக்கும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்