தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.. சொன்னது யாரு?

Mar 11, 2026,02:54 PM IST

- மயிலாடுதுறை  வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்


தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு" ஆகும் என்று கூறிய அப்துல்கலாம் ஐயாவின் வரிகளை சிறப்பிக்க இன்றைய  நாளை கொண்டாடுவோம். 


தேசிய கனவு தினம் National Dream Day


தேசிய கனவு தினம் மனிதர்களின் கனவுகளையும் இலக்குகளையும் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பொதுவாக மார்ச் 11 அன்று கொண்டாடப்படுகிறது.


ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கனவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கனவுகள் நம்மை வாழ்வில் முன்னேற ஊக்குவிக்கின்றன. பெரிய சாதனைகள் அனைத்தும் ஒரு சிறிய கனவிலிருந்து தொடங்குகின்றன என்பதை உணர்த்துவதற்கு இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


கனவு காணுங்கள், கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல! உங்களை தூங்கவிடாமல் எது செய்கிறதோ அதுதான் கனவு!"




"கனவு காண், கனவு காண், கனவு காண்! கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு".


"உங்கள் கனவுகள் நனவாகும் முன் நீங்கள் கனவு காண வேண்டும்". என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் எதிர்காலத்தைப் பற்றி உயர்வாக கனவு காண வேண்டும்.


முயற்சி செய்தால் முடியாது எதுவும் இல்லை என்ற வரிக்கு ஏற்ப நமது கனவினை நனவாக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தால் கட்டாயம் நம்மால் சாதனை புரிய முடியும். 


கனவு காண்பது வாழ்க்கைக்கு பயன் அளிக்கும். இந்த நாள் மக்கள் தங்கள் இலக்குகளை நினைவுபடுத்திக் கொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் கனவு காணும் மனப்பாங்கை ஊக்குவிக்க இந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


கடின உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் கனவுகள் நனவாகும். பல விஞ்ஞானிகளும் தலைவர்களும் தங்கள் கனவுகளை நனவாக்கியவர்கள். மேலும் கனவு காண்பது வெற்றியின் முதல் படியாகும் என்பதை உணர்த்துவதற்கு இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 


கனவுகள் நமக்கு புதிய சிந்தனைகளையும் முயற்சிகளையும் தருகின்றன. இந்த நாள் நம்மை உற்சாகமாக இருக்க நினைவூட்டுகிறது. நம்முடைய கனவுகளை அடைய முயற்சி செய்ய வேண்டும். தோல்விகள் வந்தாலும் கனவை விட்டுவிடக் கூடாது. கனவுகள் மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் பெரிய கனவு காண வேண்டும். கனவுகள் சமூக வளர்ச்சிக்கும் உதவுகின்றன.


தேசிய கனவு தினம் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தை பரப்பும் நாளாக கருதப்படுகிறது. நாம் அனைவரும் எதிர்கால  கனவு கண்டு அதை நனவாக்க முயற்சி செய்வோம்.


பிறப்பு சம்பவமாக இருக்கலாம் ஆனால், இறப்பு சரித்திரமாக அமைய வேண்டும் என்ற அப்துல் கலாமின் வரிகளுக்கு ஏற்ப நாம் ஒவ்வொருவரும் எதிர்கால கனவினை நனவாக்கி சரித்திரம் படைப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில்  மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!

news

மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!

news

சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்