நிலையற்ற விலையில் தங்கம்.. இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு

May 17, 2024,01:21 PM IST

சென்னை: இன்றைய தங்கம் விலை ஒரு கிராம் ரூ.25  என சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. நேற்று உயர்ந்திருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது.


தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. வைகாசி மாதம் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் என்பதால், இந்த விலை குறைவு விஷேசங்கள் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்திரையில் உயர்ந்திருந்த தங்கம் வைகாசியில் குறைந்துள்ளது மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின் விலையை பொருத்தவரை,  1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,770 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 25 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.200 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,385 ரூபாயாக உள்ளது. 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59080 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


கடந்த 3 நாட்களாக உயர்ந்திருந்த வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையே தொடர்கிறது. இன்று 1 கிராம் வெள்ளி விலை  ரூ.92.50க்கு விற்கப்படுகிறது. 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 740 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலையிலும் எந்த மாற்றமும் இன்றி ரூ.92,500க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்