சென்னை : தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் தனது முதல் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த மலைக்க வைக்கும் விவரங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?
திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய், தனது சொத்துக்களின் விவரங்களை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
அசையும் சொத்துக்கள்: ரூ.404.58 கோடி
அசையா சொத்துக்கள் (வாங்கிய விலை): ரூ.92 கோடி
அசையா சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு: ரூ.220 கோடி
இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.600 கோடிகளைத் தாண்டுகிறது. குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் (2020-2025) அவர் ஈட்டிய வருமானம் மற்றும் வரி செலுத்திய விவரங்களும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.

சொகுசு கார்களின் விபரம் :
விஜய்யின் கார் பிரியம் அனைவரும் அறிந்தது தான். தனது வேட்புமனுவில் சுமார் ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
BMW 530: ரூ.80.54 லட்சம்
Toyota Lexus 350: ரூ.3.01 கோடி
Toyota Vellfire: ரூ.1.63 கோடி
BMW i7: ரூ.2 கோடி
Maruti Swift: ரூ.5.35 லட்சம்
TVS XL Super: ரூ.67,400
தங்கம் மற்றும் வைர நகை விவரங்கள் :
விஜய் வசம்: ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம்.
மனைவி சங்கீதா வசம்: ரூ. 4.07 கோடி மதிப்பிலான 3,132 கிராம் தங்கம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான 134.91 காரட் வைரங்கள்.
சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் ஹீரோ அந்தஸ்தில் இருக்கும் நடிகர் விஜய். அவரிடம் இவ்வளவு சொத்துக்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் இல்லை. இது வழக்கமாக தேர்தலில் போட்டியிடும் அனைவரும் தாக்கல் செய்யும் சொத்து விபரங்கள் தான்.
வழக்கமாக வேட்பாளரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள், குடும்பத்தினரின் பெயர்களில் இருக்கும் சொத்துக்கள், அவர்கள் பெயர்களில் வாங்கிய கடன்களை தான் குறிப்பிடுவார்கள். ஆனால் விஜய் சற்று வித்தியாசமாக, தனது குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தான் வழங்கிய கடன்களின் விபரத்தையும் தாக்கல் செய்துள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விஜய்யிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலில் புஸி ஆனந்த் பெயரும் உள்ளார்.
குடும்பத்தினருக்கு விஜய் வழங்கிய கடன்கள் :
விஜய் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கணிசமான தொகையைக் கடனாக வழங்கியுள்ளார்.
மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடி.
தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு ரூ.3.02 கோடி.
தாய் ஷோபாவிற்கு ரூ.87.12 லட்சம்.
மகன் ஜேசன் விஜய்க்கு ரூ.8,78,479.
மகள் திவ்யா சாஷாவிற்கு ரூ.4.60 லட்சம்.
மேலும், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்திற்கு ரூ.3 கோடி கடன் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து விபரங்களை வெளிப்படையாக அறிவிப்பது என்னவோ நல்ல விஷயம் தான். ஆனால் மற்றவர்கள் குடும்பத்தினர்கள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் விபரங்களை தான் சொல்லுவார்கள். இவர் என்ன தன் குடும்பத்திற்கு தான் வழங்கிய தொகையையே கடன் கணக்கில் சேர்த்துள்ளார்? அதுவும் பிள்ளைகள் பெயரையும் விட்டு வைக்காமல் சேர்த்துள்ளாரே...இது என்னப்பா கணக்கு? என்ற கேள்விகள் எழுந்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி
ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை
மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?
Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
TVK Campaign: முதலில் நாளிலேயே 3 இடங்களில் பிரச்சாரம் ரத்து... என்ன செய்ய போகிறார் விஜய்?
Tamil Nadu Elections: பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு
IPL 2026.. ஐபிஎல் கிரிக்கெட் 2026 : பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்
{{comments.comment}}