சென்னை : தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக உரையாற்றினார். தனது இறுதி கட்டப் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியான திமுக, அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.
"பாஜக காலில் திமுக விழும்" :
கூட்டத்தில் பேசிய விஜய், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவின் "அடிமை" யார் என்பதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். "தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று இப்போதே சொல்கிறேன்; தனது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ள திமுக கண்டிப்பாக பாஜக காலில் விழும். பாஜகவின் அடிமையாக யார் இருப்பது என்பதில் தான் திமுக மற்றும் அதிமுக இடையே தற்போது கடும் போட்டி நிலவுகிறது. கட்சியின் நலனுக்காக மோடி மற்றும் அமித் ஷா காலில் திமுக விழுகிறதா இல்லையா என்பதை மட்டும் மக்கள் பொறுத்திருந்து பாருங்கள்," என்றார்.
கடன்பொறியில் தமிழகம்:

தமிழகத்தின் தற்போதைய பொருளாதார நிலை குறித்துப் பேசிய விஜய், திமுக அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மாநிலத்தைக் கடன் சுமையில் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவிற்கு திமுக அரசு கடன் வாங்கி, மக்கள் மீது பாரத்தை ஏற்றியுள்ளது. இவ்வளவு கடன் வாங்கிய அரசு, அதில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி மாணவர்களின் கல்விக் கடனாவது ரத்து செய்திருக்கலாம். ஆனால், இளைஞர்களின் முன்னேற்றத்தில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை.
"மக்களைக் கண்டுகொள்ளாதவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்"
இறுதி கட்டப் பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய், மக்களைக் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களை மீண்டும் கோட்டைக்கு அனுப்பக் கூடாது என வலியுறுத்தினார். "மக்களின் அடிப்படைத் தேவைகளையும், வலிகளையும் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியை, வரும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். மக்களை மதிக்காத தலைவர்களை மீண்டும் கோட்டைக்கு அனுப்பப் போகிறீர்களா? இல்லை அவர்களுக்கு விடைகொடுக்கப் போகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி மக்களுக்கு கோரிக்கை :
எடப்பாடி தொகுதி மக்கள் சுயேட்சையாக நிற்கும் வேட்பாளருக்கு விசில் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியே வர மாட்டார் என 10 முறை தோல்வி அடைந்த சேலத்துக்காரர் சொல்கிறார். சேலத்தை தாண்டி வேறு தொகுதியில் உங்களால் போட்டியிட முடியுமா? திமுக, அதன் கூட்டணிகள், மற்றும் பலர் என யாருக்கு ஓட்டளித்தாலும் அது பாஜக.,விற்கு ஓட்டளிப்பதற்கு சமம். இவர்கள் அனைவருமே ஒரே கூட்டணி தான். ரகசிய கூட்டணி வைத்து இவர்கள் நாடகம் போகிறார்கள். நான் நடிகன் தான். ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு நடிக்கவில்லை. ஆனால் நீங்கள் தான் மக்களை ஏமாற்ற மேடைகளில் பொய்களை பேசி நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
கரூர் நடந்தது இது தான் :
கரூர் விவகாரம் குறித்து பேசிய விஜய், கரூரில் நான் போலீசார் சொன்ன நேரத்தில் தான் சென்றேன். கரூரில் என்ன நடந்தது என அங்குள்ள மக்களை கேட்டாலே புட்டு புட்டு வைத்து விடுவார்கள். ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் என் மீது பழி போடுகிறீர்கள். சரி, கரூர் விவகாரத்தில் நாங்கள் எதுவும் செய்யவில்லை. அரசியல் செய்யவில்லை என்கிறீர்களே. பிறகு எதற்காக 20 ஆண்டுகளாக கரூரில் போட்டியிட்ட உங்களின் அடிமையை கோவைக்கு ஓடிப் போய் போட்டியிட வைத்தீர்கள் என திமுக.,வையும், செந்தில் பாலாஜியையும் மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார் விஜய்.
இனி நாம தான் :
குழந்தைகளே இதுவரை எது எதுக்கோ உங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் அடம் பிடித்திருப்பீர்கள். இந்த முறை உங்கள் விஜய் மாமா நான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உங்கள் வீட்டில் இருப்பவர்களை எனக்கு ஓட்டளிக்க சொல்லுங்கள். ஏப்ரல் 23ம் தேதி என்ன வேலை இருந்தாலும் நான் சொல்லுவதை கேட்டு விசில் சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள். அதற்கு பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகள்...ஐந்து ஆண்டுகள் என்ன அதற்கு பிறகு எப்பவுமே நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன். இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு வழங்குங்கள் என விஜய் உருக்கமாக தலைக்கு மேல் கைகளை தூக்கி வணங்கி கேட்டுக் கொண்டார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: வாக்காளர்கள் கவனத்திற்கு...ஓட்டு போடுவது எப்படி?
திமுக, அதிமுக இரண்டுமே பாஜக.,வின் அடிமை...கடைசி நாள் பிரச்சாரத்தில் விளாசிய விஜய்
கடைசி நாள் பிரச்சாரம்...கூடுதல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலை வேண்டாம்...இது இருந்தால் ஓட்டு போடலாம்
Agni natchatiram: அக்னி நட்சத்திரம் 2026 .. வெளுக்கெடுக்க ஆரம்பிக்கும் வெயில்.. சம்மர் டிப்ஸ்!
வயதாகி விட்டது என்று சொல்லாதீர்கள்.. Do not say you have grown old!
சாதிக்கத் துடிச்சா.. என்றுமே இளமைதான்.. If you have goals to achieve you are still young !
எங்கெல்லாம் பாராட்டப்படவில்லையோ.. அங்கெல்லாம் you should be unavoidable too!
The 8:10 Rickshaw.. ஒத்திப் போ ஒத்திப் போ.. கொஞ்சம் ஓரமா ஒத்திப் போ!
{{comments.comment}}