என்ன தோழிகளே சமையல்லாம் முடிஞ்சுதா.. அக்கடான்னு ரெஸ்ட் எடுக்கறீங்களா.. அப்படீன்னா ஒரு வாங்க ஒரு பியூட்டி டிப்ஸ் பார்ப்போம்.. ஆண்களே நீங்களும் கூட கேட்டுக்கங்க.. உங்களுக்கும் யூஸ் ஆகும்.
இன்று ஆண்கள், பெண்கள் அனைவரும் தாங்கள் மிகவும் அழகாகவும், இளமையாகவும் இருக்கவே விரும்புகின்றனர். அதற்காக அவர்கள் நிறைய பணத்தை செலவு செய்யறாங்க.
இன்னைக்கு இருக்கிற பாஃஸ்ட் பார்வர்ட் உலகத்தில நிறைய பெண்கள் வேலைக்கு செல்வதால் அவங்களுக்கு ஸ்கின் கேர் பண்ண நேரம் கிடைக்கிறதே இல்லை. வெளியில் உள்ள தூசு, புகை காரணமாக முகத்தில் அழுக்கு படிஞ்சு ஸ்கின் ரஃப் ஆயிடுது. இன்று பல பேர் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னன்னா முகம் பளிச்சுன்னே இல்ல, ரொம்ப டல்லா இருக்கிறது என்பது தான். அதுக்காக அவங்க மார்க்கெட்டில் கிடைக்கும் பல கிரீம்கள், லோஷன்கள், ஃபேஸ் பேக் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். அதில் பல ரசாயனங்கள் கலந்திருப்பதால், அவங்களுக்கு அலர்ஜி போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கு.

சில கெமிக்கல் இல்லாத கிரீம்களும் கடையில் கிடைக்கின்றன. ஆனால் அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கு. மாதம் ஒரு தொகையை இதுல செலவழிச்சும் சிலருக்கு முகத்தில ரேஷஸ், முகம் கறுத்து போறது போன்ற பிரச்சனையும் இருக்கு. இதற்கெல்லாம் நம்ம வீட்டிலேயே சூப்பரான சொலூஷன் இருக்குங்க.. வெறும் மூனே மூனு பொருட்கள் போதும் தெரியுமா? ஆமாங்க, நம்ம வீட்ல உள்ள இந்த பொருட்களை வைத்தே இன்ஸ்டன்ட் குளோ ஆகலாங்க. அதற்கு தேவையான பொருட்களை பார்ப்போமா!
தேவையான பொருட்கள்
முட்டை - ஒன்று {வெள்ளை கரு}
கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்
காபி பவுடர் - ஒன்றை டேபிள்ஸ்பூன்
முதலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியே எடுத்து ஒரு ஹேண்ட் பீட்டரை வைத்து நன்கு நுரை வரும் வரை அடித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கடலை மாவு, காபி பவுடர் கலந்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வாஷ் பண்ணி பாருங்க! வாவ் சொல்லுவீங்க! இன்ஸ்டன்டா முகப்பொலிவு கிடைக்கும்.
இந்த மிக்சரை வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன் படுத்தலாம். முகத்தில் உள்ள டார்க் பேச்சஸ், பிம்பிள்ஸ்,
ஸ்கின்ல உள்ள போர்ஸ் டைட் ஆகி உங்களுக்கு குஃலோ கிடைக்கும்.காஸ்ட்லியா கடைகள்ள கிடைக்கிற கீரிம்களை விட,ஸ்கின்னுக்கு எதுவும் ஆகாத இந்த எளிய பொருட்களை வைத்தே முகத்தை பளபளன்னு ஆக்கலாம். ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு: உரிய நிபுணர்களின் ஆலோசனையுடன், உங்களது சரும நிலைக்கேற்ற மேக்கப் முறைகளை மேற்கொள்ளுவது சிறந்தது.
டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
{{comments.comment}}