மரமா பாறையா!

Oct 16, 2026,03:01 PM IST

- வே. மிதுன்ராஜ்


மண்ணை நூலாக்கி.. மரங்களால் ஆடை நெய்து.. பல வண்ண இலைகளால் வடிவமைத்து.. பைம்பொழில் அழகு காட்சி தரும் மலைமகளின் ராஜ்ஜியத்தில் ஓர் நிகழ்வு...


பாறையைச் சுற்றி மரத்தின் வேர்கள் பரவி மரமோ உயரமாக வளர்ந்து இருந்தது.... 

பாறைக்கு ஒரு எண்ணம் தோன்ற...

மரத்திடம் நான் இல்லையெனில் நீ இத்தனை உயரம் வளர்ந்திருக்க முடியாது 

என்னைப் பற்றியுள்ளதால் தான் உறுதுணையாக நீ இவ்வளவு உயரமாக வளர்ந்துள்ளாய் என தெரிவிக்க.... 

மரமோ என் வளர்ச்சிக்கு மண்ணும் நீரும் தான் காரணம் நீ இல்லை என ஆணவத்துடன் பதில் அளித்தது...




இருவரின் வாதத்தையும்  கவனித்த மண்ணும் மழை மேகமும் கர்வத்துடன் மரத்தை வீழ்த்த ஒரு திட்டம் தீட்டியது. அதன்படி மழை பலமாக வேகமாக பெய்தது... மழை நீரின் வேகத்தால் மண் கரைந்து ஓடியது.... மரத்தின் வேர் பலமிழந்தது இருப்பினும் பாறையின் உறுதியால் மரம் நிலைத்து நின்றது. தன் தவறை உணர்ந்த மரம் பாறையிடம் மன்னிப்புக் கேட்டது...


உயர்விற்கு வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர்களே சில சமயம் வீழ்ச்சிக்கு காரணமாகின்றனர். தொடர்பில்லாதவர்கள் கூட நம் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாகலாம், நம் பலம் மற்றும் பலவீனம் அவர்கள் அறியாதவரை... எனவே நேரடியாக ஒருவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும்... மறைமுகமாக கூட ஒருவரின் வீழ்ச்சிக்கு காரணமாகக்கூடாது.


(வே. மிதுன்ராஜ், ஆசிரியர், ஈரோடு)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்