- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
அவசர நிலைகளில் உடனடி மருத்துவ உதவி மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. தற்போது இந்த சேவையை மேலும் எளிதாக்கியுள்ளனர்.
அனைவரும் ஆண்ட்ராய்டு கைப்பேசி தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், இப்போது வாட்ஸ் அப் மூலம் ஆம்புலன்ஸை அழைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையில்தான் இப்போது இந்த புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை பொதுமக்களாகிய நாம் அனைவரும் வரவேற்போம்.
மொபைலில் வாட்ஸ் அப் இருப்பதால் உடனடியாக தகவல் அனுப்பி அருகிலுள்ள ஆம்புலன்ஸ் சேவைக்கு செய்தி அனுப்ப இந்த சேவை பயன்படுகிறது.
நோயாளியின் நிலையை சுருக்கமாக தெரிவித்து, இருப்பிடத்தின் லொக்கேஷனை பகிர்ந்தால்,நோயாளிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பொருட்களையும், நோயாளிக்கு தேவையான மருத்துவரையும் அழைத்துக் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக அந்த இடத்திற்கு வர முடிகிறது.
தொலைப்பேசி அழைப்பை விட சில நேரங்களில் வாட்ஸ் அப் வசதியாக இருக்கும் என்பதால் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உறவினர்கள் யாரையும் எதிர்பார்க்காமல் உடனடியாக உதவி கேட்க முடியும். புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்புவதால் மருத்துவர்கள் நோயாளின் நிலைமையினை புரிந்து கொண்டு உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை ஆரம்பிக்க எளிதாக இருக்கும்.

அவசர சிகிச்சை செய்ய நேரிட்டால் அதற்கான நேரம் சேமிக்கப்படும். பல ஆம்புலன்ஸ் சேவைகள் தற்போது வாட்ஸ் அப் எண் மூலம் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த எண்ணை (94450 30725) சேமித்து வைத்திருக்க வேண்டும். அவசர நேரத்தில் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும். ஆம்புலன்ஸ் உடனே அனுப்புவார்கள். இது தொழில்நுட்பத்தின் நல்ல பயன்பாடு ஆகும். கிராமங்களிலும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
சாலையில் நாம் செல்லும் பொழுது யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை காப்பாற்ற நாம் அனைவரும் இந்த சேவையை முறையாக பயன்படுத்துவோம். சாலையில் ஏதேனும் விபத்து நடைபெற்றால் பொதுமக்கள் உடனடியாக 94450 30725 இந்த எண்ணிற்கு Hi என்று அனுப்பினாலும் அல்லது நோயாளின் உடல்நிலை பற்றிய குறிப்புகளை அனுப்பினாலும் அல்லது அவரின் புகைப்படம் அல்லது வீடியோவை எடுத்து அனுப்பினால் போதுமானது. மொபைல் ஜிபிஎஸ் மூலம் தகவல்கள் அனுப்புவதால் விபத்து நடைபெற்ற இடத்தை துல்லியமாக அறிந்து விரைவாக வர முடிகிறது. அனைவரும் வாட்ஸ் அப் ஆம்புலன்ஸ் வசதியை முறையாக பயன்படுத்தி உயிர்களை காப்போம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}