மாமல்லபுரத்திலிருந்து.. பெண்களுக்கு விஜய் தரப் போகும் மெசேஜ் என்னாவா இருக்கும்?

Mar 07, 2026,10:34 AM IST

சென்னை: தவெக சார்பில் இன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெறப் போகும் மகளிர் தின விழா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இதில் கலந்து கொண்டு பெண்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசியலுக்கு வந்தது முதலே, தவெக தலைவர் விஜய்யைச் சுற்றி  பல சர்ச்சைகள் வட்டமடித்துக் கொண்டே உள்ளன. லேட்டஸ்டாக இரண்டு பெரும் சர்ச்சைகளை அவர் சந்திக்க நேரிட்டது. முதல் விவகாரம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கோர்ட்டுக்குப் போனது. அதுதொடர்பான அபிடவிட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் திருமண விழாவுக்கு நடிகை திரிஷாவுடன் அவர் பகிரங்கமாக வெளிப்படையாக இணைந்து வந்தது மேலும் பரபரப்பைக் கூடியது.  நண்பர்களாக வந்தார்களோ அல்லது வேறு காரணமோ, எதுவாக இருந்தாலும், சர்ச்சை வெடித்து வரும் நிலையில் இதை விஜய் தவிர்த்திருக்கலாமே என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளனர்.




விஜய்யைச் சுற்றி கிளர்ந்துள்ள இந்த இரு விவகாரங்களாலும் அவருக்கு பெண்கள் மத்தியில் ஆதரவு குறையும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் திடீரென மகளிர் தின விழா கொண்டாடப்படவுள்ளது, அதில் விஜய் கலந்து கொண்டு சட்டசபைத் தேர்தலையொட்டி பெண்களுக்காக வாக்குறுதிகளை அளிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.


இது தவெகவினரை மட்டுமல்லாமல் அனைவரது ஆர்வத்தையும் தூண்டி விட்டுள்ளது. விஜய் என்ன பேசப் போகிறார், என்ன வாக்குறுதி அளிப்பார் என்ற எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது. மகளிர் தின விழா என்பதால் யாராவது முக்கியமான பெண் பிரபலமும் இதில் விஜய்யுடன் இணைந்து பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.


இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை விழா நடைபெறவுள்ளது. விஜய் செய்யப் போகும் டேமேஜ் கன்ட்ரோல் என்னவாக இருக்கும் என்பது இப்போது தெரிந்து விடும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்