டெல்லி: சமூக வலைதளங்களில் அலியா ரியாஸ் திடீரென வைரலாகியுள்ளார். இவர் வேறு யாருமல்ல, பாகிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைதான் அலியா ரியாஸ். இவர் ஏன் திடீரென இப்படி வைரலாகிறார்.. பலரும் இப்போது அலியா குறித்து தேட ஆரம்பித்து விட்டனர்.
அலியா ரியாஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமான ஒரு குடும்பத்தின் மருமகள் ஆவார். அதாவது முன்னாள் பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸின் தம்பி அலி யூனிஸைத்தான் திருமணம் செய்துள்ளார் அலியா ரியாஸ்.
அலியா ரியாஸ் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம். பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான, அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் அலியா ரியாஸ். 1992 செப்டம்பரில் பிறந்த இவர், நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகவும், அதிரடி மிடில்-ஆர்டர் பேட்டராகவும் பாகிஸ்தான் அணிக்காகப் பல ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார்.
அலியா ரியாஸ் கடந்த 2014-ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேசிய அணிக்காக ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20I) போட்டிகளில் அறிமுகமானார். சர்வதேச அரங்கில் 190-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி, அணியின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்.

மகளிர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 ரன்களைக் கடந்த ஒரு சில பாகிஸ்தான் வீராங்கனைகளில் இவரும் ஒருவர். 2018-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனையாக சாதனை படைத்தார்.
86 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1681 ரன்களைக் குவித்துள்ளார். 113 டி 20 போட்டிகளில் விளையாடி 1389 ரன்கள் குவித்துள்ளார்.
இவ்வளவு சிறப்பு இருந்தாலும் கூட இப்போது திடீரென அவர் டிரோல் மெட்டீரியலாகப் பேசப்பட என்ன காரணம்.. அதையும் பார்ப்போம்...
இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் அலியா ரியாஸ் விளையாடி வருகிறார். எனினும், இந்தத் தொடரில் அவராலும், பாகிஸ்தான் அணியாலும் எதிர்பார்த்த அளவுக்குச் சோபிக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போட்டியில், 17 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், 14 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்,இன்னும் மோசம். 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதேபோல பந்து வீச்சிலும் அவர் ஜொலிக்கவில்லை. பீல்டிங்கிலும் பல முறை சொதப்பினார். இதனால் பாகிஸ்தான் அணியால் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போய் விட்டது. அதற்கு அலியாவின் ஏமாற்றமான ஆட்டமும் ஒரு காரணம்.
இந்த நிலையில்தான் அவர் களத்தில் தோன்றிய காட்சிகளை வைத்து பலரும் அவரை ஓட்டி வருகின்றனர். அவரது அழகை மட்டுமே அடையாளமாக வைத்தும் அவர் பலரை கேலி செய்து வருகின்றனர்.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றதில் அலியா ரியாஸின் பங்கு அளப்பரியது. ஆனால், தற்போதைய உலகக் கோப்பைத் தொடரில் அவர் சொதப்பியதால் அவரை அழகை வைத்து பலர் கேலி செய்யும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}