சென்னை: கட்சிக் கொடிகளுக்கு நிறம் கொடுப்பதிலும் கூட பல்வேறு தத்துவங்கள், கொள்கைகள், அடையாளங்கள் அடங்கியிருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியக் கட்சிகள் வைத்துள்ள நிறங்களை முற்றிலுமாக தவிர்த்து புதிய அடையாளத்துடன் களம் குதிக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
விஜய் கட்சியின் கொடி ஆகஸ்ட் 22ம் தேதிதான் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்பு இன்றே அந்தக் கொடி குறித்த விவரம் வெளியாகி விட்டது. இதை வெளிப்படுத்தியதும் சாட்சாத் விஜய் தான். பனையூர் அலுவலகத்தில் அவர் கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்துள்ளார். அந்த வீடியோ இப்போது மீடியாக்கள் மூலம் வெளியாகி விட்டது.
இந்தக் கொடி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. கொடி முழுக்க மஞ்சள் நிறத்தில் உள்ளது. நடுவில் விஜய்யின் முகம் வட்டத்துக்குள் உள்ளது. இந்த விஜய் முகமானது கட்சியின் லெட்டர் பேடில் உள்ள முகம்தான். அதில் மாற்றம் இல்லை. ஆனால் விஜய் தேர்வு செய்துள்ள கொடிக் கலர்தான் பலரையம் கவர்ந்துள்ளது. பட்டையைக் கிளப்பும் மஞ்சள் நிறத்தில் கொடி உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலான கட்சிகளின் கொடிகளில் கருப்பு சிவப்பு நிறம் இருக்கும். தி.க., திமுக, அதிமுக, மதிமுக என பல கட்சிகளிலும் இந்த நிறம்தான் பெரும்பாலும் இருக்கும். தலித் கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் நீல நிறம் கூடுதலாக இருக்கும். பாஜகவிடம் காவி நிறம் உள்ளது. பாமக, தேமுதிகவிடம் மட்டுமே மஞ்சள் நிறம் உள்ளது. இந்த நிலையில் திராவிடம், தலித்தியம் என எந்த அடையாளமும் இல்லாமல் மஞ்சள் நிறத்தை விஜய் தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அடையாளம்
மஞ்சள் என்பது தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை மங்களகரமானது என்ற எண்ணம் உண்டு. மஞ்சள் என்பதும் தமிழ்நாட்டு மக்களிடையே மிக முக்கியமான மங்களப் பொருளாக உள்ளது. இந்த நிலையில் விஜய்யும் அதே மஞ்சள் நிறத்தைத் தேர்வு செய்திருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.
அதேசமயம், விஜய் ஒரு தீவிரமான சென்னை சூப்பர் கிங்ஸ் விசிறி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் அம்பாசடராகவும் கூட அவர் இருந்துள்ளார். மேலும் அவரது கோட் படத்திலும் கூட சிஎஸ்கே அடையாளங்கள் இடம் பெற்றுள்ளன. சிஎஸ்கேவின் அடையாளமே மஞ்சள் நிறம்தான். அந்த வகையிலும் கூட இந்த நிறத்தை விஜய் தேர்வு செய்தாரா என்று தெரியவில்லை. ஏன் இந்த நிறத்தை விஜய் தேர்வு செய்தார் என்பதை அறிய தற்போது மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}