லார்ட்ஸ், லண்டன்: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று அதிர வைத்துள்ளது.
இதன் மூலம் கடந்த 27 வருடங்களாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் இருந்து வந்த துயரத்திற்கும் முடிவு கட்டியுள்ளது தென் ஆப்பிரிக்கா அணி.
தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ககிசோ ரபாடா ஆகியோர் மிகச் சிறப்பானதொரு வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தனர். ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து WTC இறுதிப் போட்டியை வென்று ICC டெஸ்ட் கோப்பையை வென்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.
மார்க்ரம் தனது சிறப்பான இன்னிங்ஸை இன்று கொடுத்தார். கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் நின்ற அவர் 136 ரன்களைக் குவித்து அசத்தி விட்டார். ரபாடா 5 விக்கெட்களைச் சாய்த்தார். போட்டியின் நான்காம் நாளில் தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றி கிடைத்தது.

இந்தப் போட்டியின் முதல் மற்றும் இரண்டாம் நாட்களில் 14 விக்கெட்டுகள் விழுந்தன, மூன்றாம் நாளில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தன. மூன்றாம் நாளில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் 59 ரன்கள் சேர்த்தனர், இது ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியர்கள் முதல் அமர்வு முழுவதும் பேட்டிங் செய்தனர். ஆனால் அடுத்த இரண்டு அமர்வுகளில் தென்னாப்பிரிக்கா சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி, நம்பிக்கையுடனும் நிதானத்துடனும் விளையாடியது.
ஐடன் மார்க்ரம் மற்றும் டெம்பா பவுமா ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, அவுட்டாகாமல் இருந்தனர், தென்னாப்பிரிக்காவை 213/2 க்கு கொண்டு சென்றனர். மார்க்ரம் 159 பந்துகளில் 102* ரன்களுடனும், கேப்டன் பவுமா 121 பந்துகளில் 65* ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தனது புதிய வரலாற்றைப் படைத்து அசத்தியது தென் ஆப்பிரிக்கா. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல நீண்ட காலமாக நல்ல கிரிக்கெட் ஆடி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு இது மிகச் சிறந்த வெற்றியாக மாறியுள்ளது. இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?
கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு
அஜித் குமார் தாயார் மோகினி மணி மறைவு: முதல்வர் விஜய், பிரபலங்கள் இரங்கல்!
"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" .. மறக்க முடியாத முதல் நாள் வகுப்பறை அனுபவம்!
Tamil Short Story: கௌரவம் சிறுகதை (சென்ற வார தொடர்ச்சி)... எல்லாம் முடிந்து விட்டது பாஸ்கர்!
முருகப் பெருமான் அவதரித்த திருநாள்.. வைகாசி விசாகமும், காவடியும்!
Sasikala Viswanathan Haiku: நிலவு ஒளிர்கிறது!
My mother stood through every pain... தாயின் தியாகங்கள்!
{{comments.comment}}