சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன தினம் கொண்டாடலாம்?

Feb 02, 2026,04:13 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


இந்தியாவில் பிப்ரவரி 2-ம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் (World Wetlands Day) கொண்டாடப்படுகிறது. 


ஈர நில தினத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


ஈரநிலம் :




ஈரநிலங்கள் என்பது நிலமும் நீரும் சந்திக்கும் இடங்கள் ஆகும், அவை வருடத்தில் சில வாரங்களுக்கு நீரில் மூழ்கி அல்லது ஆண்டு முழுவதும் ஆழமற்ற நீரால் நிறைவுற்றதாக இருக்கலாம்.


சதுப்புநிலத் தாவரங்கள், மக்கு நிலப்பரப்புகள், ஈரமான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள் மற்றும் அவற்றின் வெள்ளச் சமவெளிகள், ஏரிகள், டெல்டாக்கள், அடர்வற்ற வனப்பகுதிகள் மற்றும் பவளப்பாறைகள் மற்றும் நெல்-வயல்கள், மீன் குளம் மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகியவை ஈரநிலங்களில் அடங்கும்.


ராம்சார் ஒப்பந்தம் :


ராம்சார் ஒப்பந்தம் என்பது சர்வதேச ஈரநிலப்பகுதிகளை (Wetlands) பாதுகாக்கும் ஒரு சர்வதேச உடன்படிக்கை. இது 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஈரானின் ராம்சார் நகரத்தில் கையெழுத்தானதால் “ராம்சார் ஒப்பந்தம்” எனப்படுகிறது.  உலகளவில் உள்ள ஈரநிலங்களை (Marshes, Lakes, Mangroves, Estuaries போன்றவை) பாதுகாப்பது.


1971-ல் ஈரானின் ராம்சாரில் கையெழுத்தான சர்வதேச ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில், இந்த நாள் மக்களுக்கும் ,கிரகத்திற்கும் சதுப்பு நிலங்கள் வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 


ஈரநில தினத்தின் நோக்கம்: 


பூமியின் சுற்றுச்சூழலில் நீர் நிறைந்த பகுதிகள் (சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆற்றங்கரைகள்) முக்கிய பங்கை வலியுறுத்துதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகும்.


ராம்சார் தளங்கள்:


2014 முதல் 2022 வரை, நாடு 49 புதிய ஈரநிலங்களை ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 2022 -ம் ஆண்டிலேயே மொத்தம் 28 இடங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராம்சார் தளங்களுடன் மொத்தம் 14 -ல் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.


ஈர நிலத்தின் முக்கியத்துவம்:


ஈரநிலங்கள் இயற்கை வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் சுமார் 6% மட்டுமே ஈரநிலங்கள் இருந்தாலும், அவை உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கு இன்றியமையாதவை ஆகும்.


ஈர நிலங்களில் வாழும் பறவைகள், மீன்கள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை பாதுகாக்க பொதுமக்கள் தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினருக்கு உதவி செய்வோம்.


சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

முதல்வர் விஜய் மீதான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் மனைவி சங்கீதா

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து

news

Whatsapp Groups: வாட்ஸ்அப் ஃபேமிலி குரூப் அட்டகாசங்கள்.. ஒரு 'நோ எக்சிட்' காமெடி த்ரில்லர்!

news

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் உடனே FIR: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

அதிகம் பார்க்கும் செய்திகள்