- எம்.எல்.பிரபா
நந்தினிக்கு கல்யாணம் முடிந்து மாமியார் வீட்டுக்கு வந்தாள். புதுமணத் தம்பதிகளை பார்த்து அண்டை வீட்டார் பலரும் வந்து வாழ்த்தி விட்டு சென்றார்கள். பக்கத்து வீட்டு ஜெயாவும், தன் மாமியாருடன் வந்தாள். நலம் விசாரித்தாள். நந்தினியிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
'எனக்கும் கல்யாணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது' என்றாள். ஒருவருக்கொருவர் பேசி , பின்பு தோழிகள் ஆனார்கள். பக்கத்து வீடு என்பதால் இருவரும் வேலை முடித்து பேசுவது, கோயில், கடைக்கு செல்வது, தோட்டத்திற்கு சென்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, சமையல் பற்றி பேசுவது இப்படியாக பல நாட்கள் சென்றது.
நந்தினியின் மாமியாரும் ஜெயாவிடம் அன்பாக பேசுவாள். சில மாதங்கள் ஆனபின் நந்தினி கர்ப்பமா னால். அதைக் கேட்ட ஜெயா மிகவும் சந்தோஷப்பட்டாள். ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுதல். அவளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தாள். நந்தினிக்கு பெண் குழந்தை பிறந்தது. நந்தினி குழந்தையுடன் ஐந்து மாதம் கழித்து தன் பிறந்த வீட்டில் இருந்து புகுந்து வீட்டிற்கு வந்தாள். குழந்தையை எப்படி பார்த்துக் கொள்ளப் போகிறேனோ என்று!
சற்று பயந்தவாறு வந்தாள்.

ஆனால் குழந்தையை பார்த்துக்கொள்ள ஜெயா ஓடோடி வந்தாள்.'நான் இருக்கும் போது நீ ஏன் கஷ்டப்படுற, நீ வேலைய பாரு நான் குழந்தை பார்த்துக் கொள்கிறேன்' என்றாள். சந்தோஷத்துடன் முழு நேரமும் குழந்தையை தூக்கியபடி நன்றாக கவனித்துக் கொண்டாள். நந்தினிக்கு பெரிய நிம்மதி. குழந்தையும் ஜெயாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. வேறு என்ன வேண்டும்? நந்தினி தனக்கு வேலை இருக்கும் போதெல்லாம் குழந்தையை ஜெயாவிடம் கொடுத்துவிட்டு வேலை செய்ய சென்று விடுவாள். இவ்வாறாக குழந்தை இரண்டு தாய்களின் அரவணைப்பில் சந்தோஷமாக வளர்ந்தது.
ஆனால், விதி யாரை விட்டது? குழந்தைக்கு ஒன்றரை வயது ஆகியது. அப்போது நந்தினிக்கு திடீரென்று உடல்நலம் சரி இல்லாமல் போய் சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.சிகிச்சை பலனில்லாமல் அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டாள். சோகத்தில் மூழ்கியது நந்தினியின் குடும்பம் . குழந்தையை ஜெயாவே முழு நேரமும் பார்த்துக்கொண்டாள். அது அவளையே அம்மா என்று கூப்பிட ஆரம்பித்தது.
நந்தினியின் கணவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் வேறு வழியின்று ஜெயாவே வளர்க்க ஆரம்பித்தாள். நந்தினியின் மாமியாருக்கும் வயதான காரணத்தினால் குழந்தையை கவனிக்க முடியவில்லை. ஜெயா பாசமுடன் தன் வீட்டிலேயே தன்னுடைய குழந்தையாக வளர்த்தாள். அவளுக்கும், தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.
குழந்தையும் பாசமாக அவளை தாயாக நினைத்து வளர்ந்தது. எப்படி கிருஷ்ணன் தேவகிக்கு பிறந்து யசோதையிடம் வளர்ந்தானோ? அதே போல் இந்த குழந்தையும் நந்தினிக்கு பிறந்து ஜெயாவிடம் வளர்ந்தது. அப்படி என்றால் இவளும் யசோதை தானே! பெற்றால் தான் தாயா? பெறாமலும் தாயாகலாம்.
(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)
சிந்தனைச் சிதறல்.. உறவுகள் அறியாத நேரத்தில் தொலைந்திடும் வேளையில்!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை
Short story: யசோதா
ராஜினாமா செய்த எம்எல்ஏ.,க்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது
தமிழகப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு: சிறப்பு வகுப்புகளுக்கு தடை
இடைத்தேர்தலில் தவெக.,வுக்கு ஜி.கே.வாசன் ஆதரவு...காலியாகிறது அதிமுக கூடாரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 55.72 சவரன் தங்கக் கிரீடம் திருட்டு: அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!
தலையங்கம்: தேர்தல் ஆணையம் செல்ல வேண்டிய பாதை!
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
{{comments.comment}}