2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

Dec 25, 2025,05:18 PM IST

டெல்லி: 2025-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்கள்இந்த ஆண்டில் கார் சந்தையில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த மாருதி சுஸுகியை பின்னுக்குத் தள்ளி, டாடா நெக்ஸான் (Tata Nexon) முதலிடத்தைப் பிடித்துள்ளது.


தரவரிசையில் எடுத்துக் கொண்டால் 2025ல் டாடா நெக்ஸான் முதலிடத்தைப் பிடித்தது. மாருதி கார்கள் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடித்தன.  4வது இடத்திலும் டாடாவே இடம் பெற்றது.




1. டாட்டா நெக்ஸான் (SUV)5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் மற்றும் எலக்ட்ரிக் (EV) மாடல்களின் வரவேற்பு.

2. மாருதி சுஸுகி டிசையர்புதிய 2025 மாடல் அறிமுகம் மற்றும் சிறந்த மைலேஜ்.

3. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்இளைஞர்கள் மத்தியில் என்றும் குறையாத மவுசு.

4. டாட்டா பன்ச் (Punch)குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த மைக்ரோ SUV.

5. ஹூண்டாய் கிரெட்டாநடுத்தர வர்க்கத்தினரின் ஃபேவரைட் பிரீமியம் SUV.


2025-ல் விற்பனையான மொத்த கார்களில் சுமார் 50% கார்கள் SUV ரகத்தைச் சேர்ந்தவை. மேலும், எலக்ட்ரிக் கார்களின் (EV) விற்பனை கடந்த ஆண்டை விட 30% அதிகரித்துள்ளது.


2025-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான பைக்குகள் : 


இருசக்கர வாகனச் சந்தையைப் பொறுத்தவரை, எப்போதும் போல ஹீரோ ஸ்பிளெண்டர் தனது அசைக்க முடியாத முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.


ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக், 2025-ல் மட்டும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதன் எளிமையான பராமரிப்பு மற்றும் அதிக மைலேஜ் (70-80 கி.மீ) கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


ஹோண்டா ஷைன் 125 (Honda Shine) 125cc பிரிவில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.


பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டைலான பைக் விரும்பிகளின் முதல் தேர்வாக இது நீடிக்கிறது.


ஸ்கூட்டர்களில் வழக்கம் போல ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) முதலிடத்திலும், டி.வி.எஸ் ஜூபிடர் இரண்டாம் இடத்திலும் உள்ளன.


2025 வாகனச் சந்தையின் போக்கிற்கு என்ன காரணம்?


மக்கள் இப்போது மைலேஜை விட காரின் பாதுகாப்பிற்கு (Safety Ratings) அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் டாட்டா நிறுவனத்தின் கார்கள் அதிக விற்பனையாகின்றன. பெட்ரோல் விலை உயர்வால், 2025-ல் சிஎன்ஜி கார்கள் மற்றும் எலக்ட்ரிக் பைக்குகளின் விற்பனை வரலாறு காணாத வளர்ச்சியை எட்டியுள்ளது.


எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டதும் ஒரு முக்கிய காரணம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்