சென்னை: அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறி யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன் கடைக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் சாகசம் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். வீலிங் செய்வது, வேகமாக பைக் ஓட்டுவது, சாகசம் செய்வது என்று தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமலேயே செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்று தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் டிடிஎஃப் வாசனின் கை எலும்பு முறிந்து, பலத்த காயம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. காவல் துறையினர் வாசனை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனு மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுபக்கம், வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து (06.10.2023 முதல் 05.10.2033 வரை) காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். பைக் ஓட்ட முடியாத காரணத்தால், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடையில், அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து, சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் டி.டி.எஃப், வாசனின் வாகன உதிரிபாகங்கள் கடைக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
{{comments.comment}}