சென்னை: 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2024-25ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 10 மற்றும் 11ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள்! பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துகள்!
இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள். கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்
இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,
10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடம், வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!
சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!
ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?
அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!
சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி
மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!
{{comments.comment}}