சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 7.25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களின் வசதிக்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், 11ம் வருப்பு மாணவர்ளுக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.
இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,89,736 மாணவர்களும் 4,30, 471 பேர் மாணவியர்களும், இவர்களைத் தவிர தனித்தேர்வர்கள் 5000 பேரும் இத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வுகளுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்கவும் சோதனையில் ஈடுபடவும் 3200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை கண்காணிக்க 46 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பணிக்கு அமர்த்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உரிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய காற்றோட்ட வசதி, வெளிச்சம், மின்விசிறி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}