- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
அன்றொரு நாள் பிற்பகல் 3:30 மணியளவில் எனக்கு தாங்க முடியாத தலைவலி.நம் மாணவர்களைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே.மிஸ்க்கு உடம்பு சரியில்ல, கத்தாதீங்க கத்தாதீங்கனு எல்லாரும் கத்துவாங்க. சற்றே யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.
தியானம்!....ஆம்....
வாரம் ஒரு நாள் தியானம் செய்யச் சொல்வேன்.அந்த சமயத்தில் நான் ஒரு கதை கூறுவேன். நான் சொல்லும் அனைத்துக் கதைகளிலும் ஒரு கண்ணாடி பஸ் இருக்கும்.
கண்ணை மூடிக் கொண்டே அந்தக் கதைக்குள் பயணித்துச் செல்வோம். அதே எண்ணத்தில் குழந்தைகள் இன்றும் என்னிடம் கதை கேட்டார்கள். என்னால் முடியவில்லை, ஆதலால் குழந்தைகளிடம் நீங்கள் தான் இன்று கதை கூற வேண்டும் என்று கூறினேன்.
வாசிப்பு இயக்கக் கதைகளைப் படித்து விட்டு மாணவர்கள் கதை சொல்வார்கள். அதில் சிறந்த கதை சொல்லியாக என் மனதில் தோன்றிய மாணவன் தருண். சுவை குன்றாமல் கொடுப்பான்.
ஆதலால் நானே தருணைக் கூறச் சொன்னேன். தருணும் கூற ஆரம்பித்தான். தருணின் கதை என்னைப் பிரமிக்க வைத்தது. பெருமை கொள்ள வைத்தது. அந்தக் கதை என்னவாக இருக்கும்???
இதோ உங்களுக்காக என் மாணவன் தருணின் கதை....

நாம எல்லோரும் சேர்ந்து ஒரு கண்ணாடி பஸ்ல ஒரு இடத்துக்கு போறோம். (நாங்க எப்பவும் போகும் அந்தக் கண்ணாடி பஸ்) நாம இப்போ அந்த இடத்துக்கு வந்துடோமாம். அது ஒரு சாக்லேட் உலகம். அங்க வந்ததும் நாம எல்லோரும் பிஸ்கட்டா மாறிட்டோம். நம்ம மிஸ்ஸும் தான். அப்படியே நாம எல்லோரும் உருண்டு உருண்டு போறோம். அங்க பார்த்தோம்னா, அந்த இடம் எல்லாம் சாக்லேட்............. சாக்லேட் மலை,சாக்லேட் falls,சாக்லேட் Volcano, சாக்லேட் மவுண்ட் எவரெஸ்ட். (எனக்கு சிரிப்பு ஒரு பக்கம்.வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஆர்வமாக ஊம் கொட்டிக் கொண்டே இருந்தேன்.)
அப்போ மிஸ் ஒரு போட்டி வச்சாங்க.
சாக்லேட் மவுண்ட் எவரெஸ்ட் ல யாரு ஏறி நம்ம இந்தியாக் கொடிய நடுறாங்கனு பார்ப்போம் னு .நாம எல்லாரும் ஏறுறோம் உருண்டு விழுறோம். ஏறுறோம் உருண்டு விழுறோம்.
ஒரு வழியா ஏறிக் கொடிய நட்டுட்டோம். கீழ இறங்கி வந்தா....மிஸ்ஸக் காணோம். மிஸ்ஸ எல்லாரும் தேடுறோம்.
என்னக் காப்பாத்துங்க காப்பாத்துங்க னு மிஸ்ஸோட சவுண்டு கேக்குது.பார்த்தா மிஸ் உடம்போட ஒரு பகுதி மட்டும் மரத்துல மாட்டிக்கிட்டிருக்கு.
கழுகு மிஸ்ஸ தூக்கி போட்டிருச்சி. மிஸ் நான்கு பாகமா ஒடஞ்சிட்டாங்க. நான்குல ஒரு பகுதி கிடச்சிடுச்சு. எல்லா பாகத்தையும் தேடி எடுத்து மிஸ்ஸ ஒட்டி அழகா மாத்திட்டு இந்த பக்கமே இனி வர மாட்டோம்னு சொல்லி திரும்பி வந்துட்டோம்.
இது தான் கதை.
எண்ணும் எழுத்தும் மூலம் அவனுக்கு கிடைக்கப்பெற்ற தாமாகவே சொந்த நடையில் கதை கூறும் திறனும்,, பிஸ்கட்டின் கவலை என்ற வாசிப்பு இயக்கக் கதையும், கணிதத்தில் நான் நடத்திய பின்னங்கள் பாடமும், சமூகவியலில் கண்டங்கள் பாடத்தில் நான் கூறிய மவுண்ட் எவரெஸ்ட் பற்றிய தகவலும் ஒன்று சேர்ந்து சற்றும் யோசிக்கால் சரளமாக அவன் கூறிய கதையில் மிளிர்ந்தது எனக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது!!!!
இருந்தாலும் கலாய் எனக்குத் தான்...
என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலேயே....என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்... வேற வழி...
அட்டகாசம் தொடரும்....
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
இந்திரஜித்!
{{comments.comment}}