- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
அன்றைய நாள் பயிற்சிப் புத்தகத்தில் மாணவர்கள் எழுதும் செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்து...
ஒட்டகச்சிவிங்கி படம் பயிற்சிப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும்.ஒட்டகச்சிவிங்கியைப் பற்றி இரண்டு மூன்று வரிகள் மாணவர்கள் சொந்தமாக எழுத வேண்டும்..
அனைவரும் எழுத ஆரம்பித்தார்கள்... பெரும்பாலான மாணவர்கள் ஒட்டகச்சிவிங்கி ஒரு விலங்கு.அதற்கு நீளமான கழுத்து உண்டு ... என்றவாறே எழுதிக் கொண்டிருந்தார்கள்...
தர்ஷன் மட்டும் மறைத்து மறைத்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே எழுதினான்...
முதல் ஆளாக என்னிடம் எழுதியதைக் காட்டும் தர்ஷன்...ஆறேழு பேர் வந்த பிறகும்,வரவே இல்லை...
பொறுமை இழந்து நானே...தர்ஷன், அப்படி என்ன தான் எழுதுறனு கேட்டேன்...
அதற்கு தர்ஷன் தரமா எழுதுறேன் மிஸ்...வெயிட் பண்ணுங்க வர்றேன் என்றான்.. பாருடா என்று அவன் வரும் வரை காத்திருந்தேன்...
தர்ஷன் எழுதியது...

நான் ஒரு விலங்கு.
என் பெயர் ஒட்டகச்சிவிங்கி.
எனக்கு நீண்ட கழுத்து உண்டு.
என் கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன.
என்று எழுதியிருந்தான்.
தர்ஷன் ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் ஏழு எலும்புகள் இருக்குமா?என்று கேட்டேன்...மிஸ் ஒட்டகச்சிவிங்கிக்கு மட்டுமில்ல மிஸ்...நம்ம கழுத்துலயும் ஏழு எலும்புகள் தான் இருக்கும் மிஸ் என்றான்.
நான் நேத்தே...எங்க அப்பா கிட்ட ஃபோன் வாங்கி ஒட்டகச்சிவிங்கியப் பத்தி படிச்சு பார்த்தேன் மிஸ் என்றானே பார்க்கலாம்...
இன்னும் சில விஷயங்கள் ஒட்டகச்சிவிங்கி பற்றிக் கூறினான்...
மிகவும் சந்தோஷமான இந்த தருணத்தை எண்ணும் எழுத்தும் டெலிகிராம் குழுவில் நான் பதிவிட்டேன்.
அவனுடைய புகைப்படத்தை Pics of the day ல் இடம் பெறச் செய்தது எண்ணும் எழுத்தும் குழு...
தர்ஷன் திறமையான மாணவன்.திறமைக்குத் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்..
இல்லையெனில் வேலையைக் காண்பித்து விடுவான்....
உதாரணமாக ஆசியாவில் முதலாவது மிக நீளமான ஆறு எது என்று நான் கூறினால், அப்போ இரண்டாவது மூன்றாவது எது மிஸ் என்று கேட்பான். அனைத்திற்கும் தயாராகத் தான் செல்ல வேண்டும்...
நிறைய சந்தேகங்கள் கேட்பான்...முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்பான்...
ஆதலால் நம்மைக் கிண்டல் செய்கிறான் என்றெல்லாம் நான் நினைக்க முடியாது...
ஆர்வத்தில் கேட்கிறான்... அம்புட்டு தான்...
அட்டகாசம் தொடரும்...
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}