- கலைவாணி கோபால்
63 நாயன்மார்கள் குறித்து அறிந்திருப்பீர்கள்.. ஒரு வேளை தெரியாவிட்டாலும் கவலை இல்லை.. அவர்களைப் பற்றித்தான் தொடர்ந்து நாம் பார்க்கப் போகிறோம். அதில் இன்று நாம் முதலில் பார்க்கப் போவது திருநீலகண்ட நாயனார்.
"திருநீலகண்டத்து குயவனார் அடியேன்" என்னும் சிறப்புக்கு உரியவர் நமது திருநீலகண்ட நாயனார். தென்னக சிவ தலங்களில் ஒன்றாக கருதப்படும் தில்லை சிதம்பரத்தில் சிவப்பணியில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் திரு நீலகண்ட நாயனார்.
இவரின் இயற்பெயர் தெரியவில்லை, இவர் சிவபெருமானின் திரு நீலகண்டர் என்ற நாமத்தை சொல்லியே தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து வேலைகளையும் செய்ததால் இவர் திருநீல கண்டர் என்று அழைக்கப்பட்டார். இவர், அடியார்களுக்கு ஓடு எனப்படும் மண் ஆளான உணவு தட்டுகளை அடியார்களுக்கு கொடுத்து தொண்டு செய்து வாழ்ந்து வந்தவர் .

இவர் 25 வயதை கடக்கும்போது ரத்தின சாலை என்னும் பெண்ணை இவருக்கு மணமுடித்து வைத்தனர். மணமான பின்பு கணவன் மனைவி இரண்டு பேருமே குயவர் பணியில் ஓடு செய்யும் பணியை மேற்கொண்டு அடியார்களுக்கு கொடுத்து சிவதொண்டு செய்து வாழ்ந்து வந்தனர்.
இவர்கள், வாழ்விலும் ஒரு திருப்பம்ஏற்பட்டது. திருநீலகண்டர் காமத்தின் விளைவால் மனைவியை தாண்டிய பெண்களை தொடர்ந்து இருந்து வந்ததால், மனைவி ரத்தின சாலை எவ்வாறு இதை தடுப்பது என்று தெரியவில்லை.
கணவரின் சிவத்தொண்டை அருகில் இருந்து பார்ப்பவள் ரத்தினசாலை, அதனால் கணவரை காட்டிக் கொடுக்கவும் அல்லது நாலு பேரிடம் சொல்லி அவமானப்படுத்தவும் அவர் விரும்பவில்லை. கணவனுக்கு அவமானம் என்றால் அது தனக்கும் என்று நினைத்து வாழ்ந்து வந்தவர். அதனால் அவரை விட்டு விலகி வாழ முடிவு செய்து, ஒரு நாள் திருநீலகண்டர் மனைவியை நெருங்கும் போது"என்னை தீண்டு வீராயின் திருநீலகண்டம்" என்று சொல்லிவிட்டார்.
அதாவது,.… சிவன் மேல் ஆணையாக நீர் என்னைத் தொடக் கூடாது என்று தனது மொத்த மனக் கொதிப்பையும் கொட்டி விட்டார். அதிர்ந்து போன திருநீலகண்டர், தான் வணங்கும் ஈசன் பெயரால் ரத்தினசாலை ஆணையிட்டதால், இனி, உன்னை மட்டுமல்ல எந்த பெண்ணையும் சிந்தையால் கூட நினைய மாட்டேன் என்று வாக்களித்தார்.
அவர்கள் உறவில் விரிசல் வந்த போதும், அவர்கள் ஒரே வீட்டில் மட்டுமே ஒருவருக்கொருவர் அனைத்து பணிகளையும் செய்து வாழ்ந்து வந்தனர். கணவனுக்கு பிடித்ததை மனைவி செய்து தருவதும் மனைவிக்கு பிடித்ததை கணவன் செய்து தருவதும் என்று அவர்கள் காலங்கள் கடந்தன. கிட்டத்தட்ட நீலகண்டருக்கு என்பது வயது ஆன நிலையில் கையில் கொம்பு ஊன்றி, கூன் முதுகு அடைந்த நிலையிலும் அவரும் அவரது மனைவியும் சிவத்தொண்டினை புரிந்து வந்தனர்.
இவர்களின் இந்த 60 ஆண்டு கால தவத்தை அருமையை வெளிக்கொண்டுவர சிவபெருமான் முடிவு செய்தார். அதன் காரணமாக அவர் ஒரு சிவனடியார் கோலத்தில் அரை ஆடை அணிந்து திருநீல கண்டர் முன் வந்து திருநீறு அளித்தார்.
அடியார் என்றாலே சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட இருவரும் அவருக்கு வேறு ஏதும் வேண்டுமா என்று திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டனர், அதற்கோ அந்த அடியவர் சிரித்துக்கொண்டே எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் ஒரு பழைய ஓடு உள்ளது, அது மிகவும் புனிதமானது உன் பொருள் அதற்கு ஈடாகாது இதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் கோயில் யாத்திரை செல்கிறேன். அதுவரை இந்த ஓட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று திரும்புகிறேனோ அன்று இதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை கொடுத்து சென்றார்.
அவர்களும் அதை ஒரு அழகிய பெட்டியில் வைத்து தீப தூபம் போட்டு அந்த ஓடை வைத்து பாதுகாத்து வந்தனர். அந்த திருவோடை அவர் திரும்பி வந்து கேட்டபோது அந்தப் பெட்டியை திறந்த போது திருநீலகண்டர் அதிர்ந்து போனார் அந்தபெட்டியில் அந்த திருவோடு ஆனது இல்லாமல் போனது. இதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார் திருநீலகண்டரும் அவரது மனைவியும் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் திகத்தின் என்று உண்மையை அந்த சிவன் அடியாரிடம் சென்று உரைத்தனர்
ஆனால் அவரோ அதை ஏற்காமல் எனது ஓட்டை நீங்கள் திருடி கொண்டீர்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டி அந்த ஊர் மக்களிடம் நீதி வழங்குமாறு முறையிட்டார்.
ஆனால், அவ்வூர் மக்களுக்கு ஏற்கனவே திருநீலகண்டரும் அவரது மனைவியும் செய்யும் சிவத்ததொ ண்டு தெரிந்து அவர் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்று வாதாடினர், ஆனால் அந்த சிவ அடியாரோ உன் ஊர் மக்கள் என்பதனால் நீங்கள் அவருக்கு பரிந்து பேசுகிறீர்கள் என்று கேட்கவே,. என்ன? செய்வது என்று தெரியாமல் ஊர் மக்கள் திகைத்தனர்.
சரி ஓடு போனால் போகட்டும் நான் எடுக்கவில்லை என்று எனக்கு சத்தியம் செய்ய வேண்டும் என்றார்.
சத்தியம் என்றால் சாதாரணமானதல்ல சிதம்பரம் குளத்தில் உள்ள புனித நீர் அறிய நான் திருடவில்லை என்று உன் மகன் கையினை பிடித்து குளத்தில் இறங்கி சத்தியம் செய்ய வேண்டும் என்றார். அதற்கு திருநீலகண்டரோ எங்களுக்கு மகன் இல்லை என்று உரைத்தார்.
ஆனால் அந்த சிவனடியார் விடவில்லை அப்படி என்றால் உன் மனைவியை கையை பிடித்து சத்தியம் செய்து தாருங்கள் என்று கூறினார். இருவரும் குளத்தில் இறங்கி கரம் பிடிக்காமல் மூங்கில் கம்பின் துணைக் கொண்டு குளத்தில் மூழ்கி சத்தியம் செய்ய தயாராயினர்.
ஆனால் அந்த சிவனடியாருக்கு கோவம் வந்துவிட்டது. என்ன இது திருட்டுத்தனம் மனைவியின் கையைப் பிடித்து சத்தியம் செய்து தர சொன்னால் கம்பை பிடித்து சத்தியம் செய்கிறீர்கள் என்று கூறினார். ஊருக்கு மக்களும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் திருநீலகண்டரும் அவரது மனைவியும் திகைத்து நின்றனர்.
இதைக் கண்ட சிவனடியார் பார்வையினை கூர்மையாக்க யோவ் உன் மனைவி தானே அவள் கையை பிடித்து சத்தியம் செய் என்று திரும்பவும் கூறினார். ஆனால் திருநீலகண்டர் யோசித்து நின்றார் இதனால் கோபமடைந்த சிவனடியார் உன் மனைவி தானே அல்லது வேற ஒரு பெண்ணை இழுத்து வந்து குடும்பம் நடத்தினாயா என்று கேட்டவே , திருநீலகண்டருக்கு அதிகம் கோபம் வந்து விட்டது .
தான் செய்த தவறினால் தன் மனைவிக்கு செய்த சத்தியத்தைப் பற்றி அங்கு ஊர் மக்களிடம் எடுத்துக் கூறினார்.. அனைவரும் திகைப்படைந்தனர் சில நிமிடங்கள். அதன்பின் நீலகண்டரையும் அவர்களின் குறித்து அனைவரும் உயர்வாக பேச தொடங்கினர். சிவனடியாரை மறந்தே போயினர்.
உடனே ,சிவன் அடியார் உங்கள் ஊரின் நாடகத்திற்கானவா இந்த அவை கூட்டப்பட்டது. அவர்கள் வாழ்ந்தால் எனக்கு என்ன ?வாழ விட்டால் எனக்கு என்ன? எனக்கு தேவை சத்தியம் செய் 'என்று கோவமாக கூறினார். ஆனாலும் வேறு வழியில்லை இருவரும் கைகளிலும் கம்பு பிடித்து மூன்று முறை நீரில் மூழ்கி இருந்தனர்.
என்ன அதிசயம் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படி இளமை கோலத்தில் திருநீலகண்டரும் அவரது மனைவி ரத்னா சாலையும் தென்பட்டனர். இறந்தோர் கூட உயிர் பெற்ற கதை உண்டு.. ஆனால்....., காலத்தை பின்னோக்கிய நகர்த்தியை கண்டு அனைவரும் திருநீலகண்டர் இடமும் அவர் மனைவியின் காலிலும் விழுந்தனர்.
அன்று முதல் திரும்புதத்தில் உள்ள அந்த குளம் இளமையாக்கினார் குளம் என்று பெயரிடப்பட்டு இன்று முதல் அது நடைமுறையில் உள்ளது. என்ன அதிசயம் அதன் பின் அந்த சிவனடியாரும் காணவில்லை.
சட்டென அங்கு பெரும் வெளிச்சம் தெரிந்து வெள்ளை காளை மாட்டின் மேல் உமையுடன் காட்சியளித்த சிவபெருமான் அவர்களை ஆசீர்வதித்து"புலன்களை எனக்காக அடக்கி வெற்றி கொண்ட உயர்ந்த பக்தர்களே இளமை மாறாமல் இவ்வுலகில் வாழ்ந்த பின் எம்மை அடைவார்கள்" என்று வரம் அளித்து சிவன் மறைந்த சென்றார்.
ஒரு நல்ல கணவன் தவறை உனது பின் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி வாழ்ந்து வந்தவர் திருநீலகண்டர். இல்லறத்தில் கணவன் பெயரை காக்க எப்படி இருக்க வேண்டும் என்பதை ரத்தினசாலை அவரது மனைவியும் கடைப்பிடித்தார். இதன் காரணமாகவே திருநீலகண்ட நாயனார் நாயன்மார்களில் முதலாவதாக போற்றப்படுகின்றார். இவர்களும் சிவபெருமான் ஆசீர்வாதம் போல் வாழ்ந்து சிவபெருமானின் பாதத்தை சென்று முத்தி அடைந்தனர்.
திருநீலகண்டரின் குருபூஜை தை மாதம் விசாக நட்சத்திரம் அன்று நடைபெறும். சிதம்பரத்தின் அதன் கொண்டாட்டமே தனி நாயனார் தன் மனைவியுடன் இறங்கி இளமை திரும்ப பெற்ற அந்த தீர்த்தக்களும் இப்போதும் இளமையாக்கினார் குளம் என்று அவர் நினைவாகவே அழைக்கப்படுகிறது. சிதம்பரம் செல்லும் தம்பதிகள் அங்கு சென்று நீராடினால் பாசப்பிணைப்பு அதிகரிக்கும் என்பது பாவங்கள் தீரும் என்பதும் நம்பிக்கை.
சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!
Chennai Super Kings New Record: தோனி, ரெய்னா இல்லாமல்... 17 ஆண்டுகளில் இது முதல் முறை!
CSK in Trouble: அடுத்தடுத்து விழும் விக்கெட்டுகள்.. கடும் அப்செட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள
எம்.பியாக இருக்கும் திருமாவளவன்.. எம்.எல்.ஏவாக முடிவெடுத்தது ஏன்.. உற்று நோக்கும் திமுக!
திமுக விரைவில் விடைபெறப்போகிறது - கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்
தர்மபுரியில் செளமியா.. முதல் முறையாக சட்டசபைத் தேர்தல் களத்தில்.. பெரம்பூரில் திலகபாமா!
தமிழகத்தில் பிரதமர் மோடி சூறாவளிப் பிரச்சாரம்.. சென்னையில் ஏப். 4ல் பிரம்மாண்ட ரோடு ஷோ!
போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்
{{comments.comment}}